உலகில் மனித இனம் தோன்றியபோது முதன்முதலாக இருந்தவை 4 இனங்கள் மட்டுமே. இன்று இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 72 மரபினங்களின் கூறுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நான்காக இருந்த இனங்கள் 72-_க்கும் மேற்பட்ட துணை இனங்களாக பெருகுகிறது எப்படி? இனக் கலப்பினால் மட்டுமே அது சாத்தியமாகி இருக்கிறது.
எனவே, இரண்டு இனங்களின் மரபணுக்கள் கலக்கும்போது முற்றிலும் புதிய மரபணு உண்டாகி அது பரிணாம வளர்ச்சியின், அறிவாற்றலின், அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. புதிய புதிய சிந்தனைகள் உருவாகின்றன. இவ்வாறு வளர்ந்த மனித இனம், தேங்கி நிற்பதற்கு அகமண முறை காரணமாக இருக்கிறது. அகமண முறை இல்லாத மேற்கத்திய நாடுகளின் அறிவாற்றல், அறிவியல் வளர்ச்சியுடன் அகமண முறைக்குள் முடங்கி நிற்கும் நம் நாட்டின் அறிவாற்றல், அறிவியல் வளர்ச்சியை ஒப்பிடும்போது அக மண முறை எந்த அளவுக்கு நம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்பது விளங்கும்.