சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் நடுக்கடலில் மர்மமான முறையில் காணாமல் போன அமெரிக்காவின் போர்க் கப்பலை அண்மையில் கண்டு-பிடித்துள்ளனர். கடந்த 1921ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ். கானெஸ்டோகா என்ற கப்பல் சான்ஃபிரான்ஸிஸ்கோ துறைமுகத்திலிருந்து ஹவாய் தீவின் பியர்ல் துறைமுகத்துக்கு செல்லும் வழியில் காணாமல் போனது. அப்போது அந்தக் கப்பலில் 56 பேர் இருந்தனர்.
இந்த கப்பலின் உதிரி பாகங்கள் ஹவாய் தீவுக்கு அருகே பியர்ல் துறைமுகப் பகுதியில் 2009ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. அவை காணாமல் போன கானெஸ்-டோகாவினுடையதுதான் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்க கடற்படை வரலாற்றில் மிக நீண்டகாலமாக நீடித்து வந்த மர்மம் விலகியிருக்கிறது.