பச்சையாகவே சொல்லுகின்றேன். இந்தக் கடவுள்களை எல்லாம் ஒழிக்க வேண்டுமென்பதற்காகத் தான் ஈரோட்டில் புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டி அதில் தீர்மானங்கள் நிறைவேற்றினோம். எங்களுக்கு முதல் வேலை மதத்திலே, சாஸ்திரத்திலே, கடவுள்களாலே ஏற்பட்டிருக்கிற இழிவுகளை ஒழிப்பதுதான். இன்றைய கடவுள்களில் எந்தக் கடவுள் விபசாரம் பண்ணாத கடவுள்?
கிருஷ்ணன் தேவடியாள் வீட்டுக்குப் போவது; கோபிகள் வீட்டில் புகுந்து, புருஷன் இல்லாத சமயத்தில் கற்பழிப்பு, திருவிளையாடல் செய்வது; கோபிகள் குளிக்குமிடத்துக்குச் சென்று சேலைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் மேலே தூக்கினால்தான் சேலைகளைக் கொடுப்பேன் என்று சொல்லி அதைப் பார்த்துச் சிரிப்பது! இவன் ஒரு கடவுளா? இதையும் பொம்மை படமாக வைத்து மானமற்ற, அறிவற்ற மடையர்கள் கும்பிடுகிறார்களே, பகுத்தறிவின் பெயரால் கேட்கிறேன், இப்படி ஒரு கடவுள் நமக்கு எதற்கு? நாம் இந்தக் கடவுளை எதற்காகக் கும்பிட வேண்டும்? இதை உடைத்துத் தூள் ஆக்க வேண்டாமா? அதே மாதிரி பரமசிவன், சுப்பிரமணியன் முதலிய கடவுள்களின் யோக்கியதையும் அப்படித்தானே! இவை அத்தனையும் புரட்டு, இமாலயப் புரட்டு. “பார்ப்பானுக்கு கடவுள் இல்லை.
எந்தப் பார்ப்பானாவது பார்ப்பாத்தியாவது பட்டினி ஊர்வலத்தில் வருகிறார்களா? கஞ்சித் தொட்டியில் “க்யூ’’ வரிசையில் நிற்கிறார்களா? ஏன் அவனுக்கு மாத்திரம் அந்த நிலை இல்லை. நமக்கு இந்த நிலை? இது என்ன நியாயம்?
– தந்தை பெரியார்