கர்ப்பப்பைக் கட்டிகளுக்கு என்ன காரணம்?

மே 16-31

குழந்தையின்மைக்கான காரணங்களாக நாம் புரிந்து கொண்டிருக்கும் பல காரணிகளைக் கடந்தும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்பதையும், கருவிகளின் வழியாக, பொருளை முன்னிலைப்படுத்தும் ஆய்வுகள் மட்டுமே இறுதியானவை அல்ல என்பதையும் பார்த்தோம்.

குழந்தையின்மை என்பதை இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான பிரச்சினைகளாக மட்டும் பார்க்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறோம். உடலின் அடிப்படை ஆரோக்கியம் சரியாக இருந்தால் மட்டுமே, உடலின் இரண்டாம் நிலை நிகழ்வான கருத்தரித்தல் நடைபெறும். இப்பிரச்சினைக்கு ஆண் குறைபாடாக விந்தணு இல்லாத நிலை, அதன் செயலற்ற தன்மை போன்றவை கூறப்படுகின்றன. இதுபற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம்.

சோதனைக் குழாய் வழி கருத்தரித்தல் செய்து குழந்தை உருவாக்கும் கரு உருவாக்கல் மய்யங்களில், கருமுட்டையோடு இணைப்பதற்கு ஒரே ஒரு விந்தணுவை மட்டும்தான் தேர்வு செய்கிறார்கள். விந்துத் திரவத்தில் இருக்கும் லட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றே ஒன்று முழு செயல்பாட்டில் இருந்தால் போதுமல்லவா? ஆனால், நவீன மருத்துவம் லட்சக்கணக்காண விந்தணுக்களில் அறுபது சதவிகிதத்திற்கும் அதிகமான அணுக்கள் முழு செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது முரண் அல்லவா?

முற்றிலும் விந்தணுக்களே இல்லாத நிலையிலும் கருவை உருவாக்குவதற்கான ஆற்றலை உடல் பெற்றிருக்கிறது என்பதை சில ஆய்வுகள் மூலம் புரிந்து கொண்டிருக்கிறோம். குழந்தையின்மைக்கான ஆண் குறைபாடு என்பது உடலுறவில் ஈடுபட முடியாத நிலை மட்டும்தான். பிரச்சினைகளும் உடலின் அடிப்படை ஆரோக்கியத்தில் ஏற்படும் குறைபாடுதான். அடிப்படை ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளும்போது எல்லாவிதமான குறைபாடுகளும் நீங்கி, கரு உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

பெண் குறைபாடு என நவீன மருத்துவம் கூறும் காரணங்களைப் பார்க்கலாம்.

உடலமைப்பில் ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் அமைப்பைவிட, பெண் உடலமைப்பு சிக்கலானதும் அதிக உறுப்புகளைக் கொண்டதுமாக இருப்பதால் ஏராளமான காரணங்களைக் கூற வாய்ப்பு ஏற்படுகிறது. சினைப்பை எனப்படும் கருமுட்டை உருவாகும் பைகள், கர்ப்பப்பை எனப்படும் சிசு உருவாகி வளரும் இடம், இவ்விரண்டு பைகளையும் இணைக்கும் கருக்குழாய்கள் இவைதான் பெண் உடலமைப்பின் மிக முக்கியமான உடலுறுப்புகள்.

மேற்கண்ட ஒவ்வொரு உறுப்பின் குறைபாடும், இயக்கமும் உடலின் அடிப்படை ஆரோக்கியத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. அடிப்படை ஆரோக்கியம் சரியாக இருக்கும் குழந்தைதான் பூப்படைகிறது. அதில் பலவீனம் இருக்கும் பெண் குழந்தைகள் கருமுட்டை உருவாக்கத்திலும், கருப்பை வளர்ச்சியிலும் குறைபாட்டோடு இருக்கின்றனர். உள்ளுறுப்புகள் முழுமையாக வளர்ச்சி பெறாததால் பூப்படைதல் தாமதமாகிறது.

அக்குபஞ்சர் மருத்துவத்தில் பூப்படைதல் குறித்த ஒரு கணக்கு இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு பல் விழுந்து முளைக்கும் வயதை, இரண்டால் பெருக்கினால் பூப்படையும்  வயதைக் கண்டுபிடிக்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஆறு வயதில் பல் விழுந்து முளைக்கிறது என்றால், அக்குழந்தை பன்னிரெண்டு வயதில் பூப்படைய வேண்டும். ஒரு வேளை பன்னிரெண்டு வயதில் பூப்படையவில்லை என்றால் ஆறு வயது முதல் பன்னிரெண்டு வயது வரை ஏற்பட வேண்டிய உள்ளுறுப்பு வளர்ச்சி பலவீனமாக இருக்கிறது என்று பொருள். அதற்கு காரணமும் ஆறு முதல் பன்னிரெண்டு வயது வரை உள்ள அடிப்படை ஆரோக்கியம்தான்.

பூப்படைதலுக்குப் பின் தொடரும் மாதவிடாய் அதிக வலியோடும் தொந்தரவு-களோடும் இல்லாமல், இயல்பாக இருக்க வேண்டும். அப்படி தொந்தரவுகள் ஏற்பட்டால் கர்ப்பப்பைக் கழிவுகள் முழுமையாக நீக்கப்படவில்லை என்பதும், அவற்றை நீக்குவதற்-கான ஆற்றல் குறைந்து போயிருக்கிறது என்பதும் அர்த்தம். இதுவும் உடலின் அடிப்படை ஆரோக்கியக் குறைவுதான்.

இதுதவிர, இப்போது குழந்தையின்மைக்கான மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது கர்ப்பப்பைக் கட்டிகள், தசைக்கட்டிகள், நீர்க்கட்டிகள் போன்ற கட்டிகள் கர்ப்பப்பையில் ஏற்படுவது, இதனைப் புரிந்துகொள்ள கட்டிகள் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும்.

உடலில் இயல்பாக வெளியேற வேண்டிய கழிவுகள் வெளியேறாமல், உடலில் தேங்கி விடுவதே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம். ஏன் தேங்கி விடுகிறது? ஏற்கனவே நாம் பார்த்த அடிப்படை ஆரோக்கியப் பிரச்சினைகள் பசி, தூக்கம் போன்ற இயல்பான வாழ்வியல் தேவைகளைப் புறக்கணித்து உடலின் ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக் கொள்கிறோம். இப்படி இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறையால் இயல்பாக வெளியேற வேண்டிய கழிவுகள் உடலில் தேங்கி விடுகின்றன.

தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் வேலையை உடலின் எதிர்ப்பு சக்தி செய்கிறது. இப்படி தேங்கும் கழிவுகள்தான் விதம்விதமான நோய்ப் பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கால் ரத்த நாளங்களில் கழிவுகள் தேங்கினால், வெரிகோஸ் வெயின்ஸ் (ரத்த உறைவு), இதய நாளங்களில் தேங்கினால் ஹார்ட் பிளாக், சிறுநீரகத்தில் தேங்கினால் கற்கள் அல்லது கட்டிகள். மூளைப் பகுதியில் தேங்கினால் ரத்த உறைவு. இதேபோல இரைப்பை கட்டிகள், தோலில் உள்ள நீர்க்கட்டிகள் என்று கழிவுகள் எந்த உறுப்புகளில் தேங்குகின்றனவோ, அதன் அடிப்படையில் பெயர் பெறுகின்றன.

ஆக, உடலில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுகள் தேங்குவதே நோய். இப்படி தேங்கிய பிறகும் நாம் தொடர்ந்து சரியான வாழ்வியல் முறைகளைக் கடைபிடிக்காமல், மேலும் கழிவுகள் தேங்குவதற்கு வழி வகுத்தோமானால் கழிவுகள் அடுத்தடுத்த நிலைகளை அடைகின்றன. இதன் இறுதி நிலைதான் புற்றுநோய்.

உடல் முழுவதும் எந்தப் பகுதியில் கழிவுகள் தேங்கினாலும் அதற்குக் காரணம் நம் இயற்கை விதிமீறலே. பசி, தூக்கம் போன்ற அடிப்படையான வாழ்வியல் அம்சங்களை கடைபிடிக்காமல், நம் இஷ்டத்திற்குச் சாப்பிட்டு தூக்கத்தைக் கெடுப்பது பேராபத்தை விளைவிக்கும்.

கட்டிகள் எங்கு தோன்றினாலும் _ அது சார்ந்துள்ள உறுப்புகளின் இயல்பைப் பாதிக்கும். நுரையீரலில் ஒரு கட்டி உருவானால் நுரையீரலின் இயல்பான வேலையான சுவாசத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். சுவாசிப்பதில் கஷ்டமோ அல்லது ஆஸ்துமா போன்ற மூச்சிறைப்போ ஏற்படலாம். என்ன வகையான தொந்தரவு ஏற்படும் என்பது கட்டியின், கழிவின் அமைவிடத்தைப் பொறுத்தது.

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது _ நுரையீரல் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படுவதற்கு, அங்கு அமைந்துள்ள கட்டிகள்-தான் காரணம். ஆனால், கட்டிகள் ஏற்படு-வதற்குக் காரணம் நுரையீரல் அல்ல. நம் வாழ்க்கை முறை.

இதேபோன்று தான் கர்ப்பப்பை கட்டிகளை கணக்கில் கொள்ள வேண்டும். இயல்பற்ற வாழ்க்கை முறையால் கர்ப்பப்பையில் கழிவுகள் தேங்குகின்றன. கழிவுகளின் தன்மைக்கேற்ப அவை நீர்க்கட்டிகளாகவோ, நார்க்கட்டி-களாகவோ, தசை கட்டிகளாகவோ உருவாகின்றன. கட்டிகளின் அமைவிடத்தைப் பொறுத்து, கர்ப்பப்பையின் இயல்பை பாதிக்கிறது. ஆக, கட்டிகள் ஏற்படுவதற்கான மூலக்காரணம் _ கர்ப்பப்பையில் இல்லை, நம் வாழ்க்கை முறையில் இருக்கிறது.
முறையற்ற மாதவிடாய், வலி தொந்தரவு-களோடு கூடிய உதிரப் போக்கு போன்ற பெண் தொந்தரவுகளுக்கான அடிப்படைக் காரணமும் _ வாழ்க்கை முறைதான். எந்த வகையான பிரச்சினையாக இருந்தாலும் வாழ்க்கை முறையை ஒழுங்கு செய்து கொள்வதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். கழிவுகளை எளிமையாக நீக்கிக் கொள்வதற்காக எளிய சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ளலாம்.

பெண்கள் தொடர்பான நோய்களுக்கு பசி, தூக்கம் போன்ற இயற்கை விதிகளை மீறுதல் தவிர, வேறு ஒரு காரணமும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *