இந்தியாவின் கருப்புப் பணம் ரூ.12 லட்சம் கோடி?

மே 01-15

சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு மற்றும் பணம் பதுக்கல் பற்றி அண்மையில் இத்தாலியின் மத்திய வங்கி புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வை 2013இல் சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் சர்வதேச தீர்வு வங்கி (Bank of International Settlements)  வெளியிட்ட புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு மூன்று பொருளாதார அறிஞர்கள் மேற்கொண்டனர்.

2013ஆம் ஆண்டின் அறிக்கைபடி சர்வதேச அளவில் பணம் பதுக்கும் நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்கு 2.5 சதவீதமாக உள்ளது. அதாவது 15,200 கோடி டாலர் முதல் 18,100 கோடி டாலர்களாக உள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.8.9 லட்சம் கோடி முதல் ரூ.12 லட்சம் கோடியாகும். பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் வங்கி வைப்புகள் மூலம் பணப் பதுக்கல் நடக்கிறது.

உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி-யிலிருந்து பணம் மறைக்கப்படுதல், நாட்டில் அறிவிக்கப்பட்ட சொத்துக்-களுக்கு நிகராக மறைக்கப்படும் சொத்துகள் என இரண்டு விஷயங்களின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்-பட்டுள்ளது. இப்படி மறைக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு சர்வதேச அளவில் ரூபாய் மதிப்பில் 33,000 கோடியாகும். இவ்வளவு பணத்தைப் பதுக்க அனுமதித்துவிட்டு தான் சில நூறு கோடி கருப்புப் பணத்தை மீட்டதை விளம்பரப்-படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர் அரசியல்வாதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *