பெரியாரை அறிவோமா?

ஜூலை 01-15

1. பெரியார் அவர்கள் 10 வயதுச் சிறுவனாக இருந்தபோது இரண்டு கால்களிலும் விலங்குக் கட்டைகள் பூட்டப்பட்டதற்கான காரணம்

அ) மரங்களின் உச்சியிலும் வீட்டின் மாடியிலும் ஏறி விளையாடியமையால் ஆ) புழங்கக்கூடாத ஜாதியினருடன் புழங்கி, அவர்களின் வீட்டுத் தின்பண்டங்களைத் தின்று அவர்களோடு விளையாடியமையால் இ) ஊரைவிட்டு அடிக்கடி ஓடிப்போன மையால் ஈ) பெற்றோரையும் ஆசிரியர்களையும் மதிக்காமையால்

2. சிக்கனத்தின் சின்னம் பெரியார் அவர்கள் புகைவண்டியில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வது குறித்து அன்பர் ஒருவர் கேட்டதற்கு அய்யாவின் பதில்

அ) பணம் இல்லை என்றார் ஆ) நிறைய மக்களைப் பார்ப்பதற்காக என்றார் இ)நான்காம் வகுப்பு என்று ஒன்று இல்லை என்றார் ஈ) முதல் வகுப்புப் பயணச் சீட்டு கிடைக்கவில்லை என்றார்.

3. வைக்கம் வந்து சேர்ந்த 13.4.1924 அன்று மாலையே பெரியார் ஈ.வெ.ரா. மூன்று மணி நேரம் உரையாற்றினார். அவர் உரையாற்றிய இடம் எது?

அ) கொச்சி ஆ) திருவனந்தபுரம் இ) எர்ணாகுளம் ஈ) வைக்கம் குளக்கரை

4. தந்தை பெரியார் காங்கிரசில் சேர்ந்தவுடன் ………………………………..

அ) அமைச்சர் பதவியேற்றார் ஆ) கவர்னர் பதவியேற்றார் இ) தாம் வகித்து வந்த 9 கவுரவப் பதவிகளைத் துறந்தார். ஈ) தாம் வகித்து வந்த 29 கவுரவப் பதவிகளைத் துறந்தார்.

5. வைக்கம் போராட்டத்தில் ஒருமாத சிறைத் தண்டனை அனுபவித்து வெளிவந்த தந்தை பெரியார் …..

அ) போராட்டத்தை நிறுத்திக் கொண்டார் ஆ)ஈரோட்டுக்குத் திரும்பினார் இ) காந்தியாரின் ஆதரவை வேண்டினார் ஈ) நாடு கடத்தல் உத்தரவை மீறி மீண்டும் கைதானார்.

6. குருகுலத்தை ஒழிக்க பெரியார் கையாண்ட முறை யாது?

அ) வ.வே.சு. அய்யர்மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தார் ஆ) வ.வேசு.அய்யரின் பார்ப்பனத் திமிரை காந்தியாரிடம் முறையிட்டார். இ) தமிழ் மக்கள் செய்து வந்த பண உதவியை நிறுத்தச் செய்தார். ஈ) வ.வே.சு. அய்யரைக் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கினார்.

7. சாரதா சட்டத்தை எதிர்த்ததற்காக 1928இல் பெரியாரால் கடுமையாகக் கண்டனம் செய்யப்பட்ட நீதிக்கட்சி அமைச்சர் யார்?

அ) ஏ.பி.பாத்ரோ ஆ)பனகல் அரசர் இ) பொப்பிலி ராசா ஈ) டாக்டர் சுப்பராயன்

8. பொதுவுடைமை ஏற்படுவதற்கு முன்பு எதைப் பெற வேண்டுமென்கிறார் பெரியார்?

அ) நாட்டு விடுதலை ஆ) மூடநம்பிக்கையிலிருந்து அறிவுக்கு விடுதலை இ) பொதுவுரிமை ஈ) இவை அனைத்தும்

9. மக்கள் தங்கள் உயிருக்கு நிகராக எதைக் கருத வேண்டும் என்கிறார் பெரியார்?

அ) தாய்நாட்டின் விடுதலை ஆ) குடும்பப் பெருமை இ) சுயமரியாதை ஈ) பகுத்தறிவு

10. பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து, பெரியாரில் பெரியார் என்று உரையாற்றிய அஞ்சாநெஞ்சன்

அ) குடந்தை ஜோசப் ஆ) எம்.என்.நஞ்சையா இ) பட்டுக்கோட்டை அழகிரி ஈ) அறிஞர் அண்ணா.


பெரியாரை அறிவோமா-? விடைகள்

1.    ஆ

2.    இ

3.    ஈ

4.    ஈ

5.    ஈ

6.    இ

7.    அ

8.    இ

9.    இ

10.    இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *