Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..
  • தெலுங்கானா பிரச்சினையில், தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதைத் தவிர வேறு எந்த மாதிரியான தீர்வையும் ஏற்க மாட்டோம்.  இதை நாங்கள் ஏற்கெனவே பிரதமரைச் சந்தித்த போது தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
    – சந்திரசேகர ராவ் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர்

  • அசாமில் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நாங்கள் உறுதியாய் உள்ளோம்.  எந்த நிபந்தனையும் இன்றி அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம்.
    – அரபிந்தா ராஜ்கோவா உல்பா அமைப்பின் தலைவர்

  • பேச்சுவார்த்தைக்கு முன்பாக எங்கள் இனத்தைக் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை அரசுடன் பேசும்படிக் கேட்டுக் கொண்டுள்ளோம்.  அதில், எங்கள் கோரிக்கைக்குச் சாதகமாக அரசு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வோம்.  அரசு சாதகமாக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குச் செல்வோம்.   – பெய்ன்ஸ்லா

  • ராஜஸ்தானில் அரசு வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கோரிவரும் குஜ்ஜார் இன மக்களின் தலைவர்

  • வாக்காளர் என்ற அடிப்படைப் பண்டத்தின் அன்பு, பயம், கோபம் ஆகியவற்றை வைத்து கடும் போட்டிக்கிடையில் தொழில் செய்யும் ஒரு முறையான வியாபாரம்தான் ஜனநாயகம். இந்திய நடுத்தர வகுப்பினருக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு தாகம் உண்டு. ஆனால், தங்கள் இன்பங்களுக்கு வேறு யாராவது செலவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
    – எம்.ஜே.அக்பர் வட இந்திய எழுத்தாளர்

  • கடந்த 1970 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட்டுகள் தீவிரமாக இருந்த இருண்ட காலம். அத்தகைய இருண்ட காலகட்டத்தைத்தான் விரும்புகிறது திரிணாமுல் காங்கிரஸ்.  இதில் பணக்காரர்கள்தான் குவிந்துள்ளனர்.  காங்கிரஸ் எப்போதும் பணக்காரர் களுக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது.
    -புத்ததேவ் பட்டாச்சார்யா, மேற்கு வங்க முதல்வர்

  • நான் செய்த ஆராய்ச்சி இந்தியாவிற்காக அல்ல; உலகத்திற்காகவும் உலக நன்மைக்காகவும் செய்தேன்.  அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் தேசிய உணர்வைப் புகுத்த வேண்டாம். – வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அறிவியளாலர்