இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து சட்டத்தின் சில பிரிவுகளுடன் மட்டுமே தொடர்புடையது. இந்தச் சட்டத்துடன் தொடர்பில்லாத ஏனைய அம்சங்கள் பழைய இந்துச் சட்டத்தின்படி தீர்மானிக்கப்படுகின்றன. இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளால் இந்தச் சட்டங்கள் மேலாண்மைச் செய்யப்படுகின்றன. இந்து சித்தாந்தம் முக்கியமாக இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம், வங்காளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நடைமுறையிலுள்ள தயாபாகா கொள்கை (Daya Baga school), இந்தியாவின் ஏனைய பகுதிகளில் பிரயோகிக்கப்படும் மிடக்ஷாரா கொள்கை (Mutal Share School)என்பனவே அந்த இரண்டு பாகங்கள். இதைத் தவிர வாரிசுரிமைக்கான பிரத்யேகச் சட்டங்கள் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் (கேரளம், மங்களூர்) நிர்வகிக்கப்படுகின்றன.
பரம்பரைச் சொத்து:
நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் சொந்தமான சொத்து (தந்தையார், பாட்டனார், முப்பாட்டனார்) ஆண் வர்க்கத்தால் உரிமை கொண்டாடப்பட்ட சொத்து – பரம்பரைச் சொத்து என்று அழைக்கப்படுகிறது. அந்தச் சொத்தில் பங்கு பெறுகின்ற உரிமை பிறப்பிலிருந்தே தொடர்ந்து வருகின்றது. பிற சொத்துரிமைகளிலிருந்து இது வேறுபட்டது. இதர சொத்துரிமைகள் அவற்றின் உண்மையான உரிமையாளர் இறந்தபிறகுதான் தொடங்குகின்றன. பரம்பரைச் சொத்தில் ஒருவரின் உரிமைகள் per stripes and not per castle என்ற முறையில் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு தலைமுறைக்கு உரித்தான பங்கு முதலில் தீர்மானிக்கப்படுகிறது. தொடர்ந்து வரும் ஒவ்வொரு தலைமுறையும், அதற்கு முந்தைய தலைமுறை பெற்றுள்ள சொத்தை பல பாகங்களாகப் பிரித்துக் கொள்கின்றன.
எது பரம்பரைச் சொத்து கிடையாது?
ஒருவருடைய தாயார், பாட்டியார், மாமா, சகோதரர் – இவர்களிமிடருந்து பெறுகின்ற சொத்து பரம்பரைச் சொத்து ஆகாது. உயில் மூலமாகவோ, நன்கொடையாகவோ பெறுகின்ற சொத்தும் பரம்பரைச் சொத்து ஆகாது. சுயமாகச் சம்பாதித்தச் சொத்தை பரம்பரைச் சொத்துக்கள் என்ற பிரிவிற்குள் உட்படுத்தப்-படும்போது, பொதுவில் அனுபவிக்கப்படும்-போது, அது பரம்பரைச் சொத்து என்று கருதப்படும். இந்த வழக்கின் உண்மைகளின் சந்தர்ப்பங்களின் அடிப்படையில், இந்தப் பிரச்சினையைத் தீர்மானிக்க வேண்டும். (on the facts and circumstances of the case.
HUF, Coparcenary – என்ற இரண்டும் தொடர்பற்றவை
பொதுவாக, Hindu Undivided Family, Coparcenary/Ancestral
என்ற இரண்டு வார்த்தை-களும் இடம் மாற்றப் பயன்படுத்தப்படுகின்றன. HUF ஒன்றாகச் சேர்ந்துவாழும் ஒருஇந்துக் குடும்பத்தைக் குறிக்கிறது. அந்தக் குடும்பத்திற்குச் சொத்து இருக்க வேண்டிய கட்டாயமில்லை. சொத்து இல்லாமலும் இருக்கலாம். அந்தக் குடும்பத்தில் பெண்களும் உள்ளடங்கியிருக்கலாம். இது பழமையான Coparcenary குடும்பத்தில் அனுமதிக்கப்-படுவதில்லை.
அண்மையில், இது தொடர்பான சட்டத் திருத்தங்கள் மத்தியிலும், மாநிலங்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளன. பழமையான Coparcenary குடும்ப அமைப்பில், ஆண்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க அனுமதிக்கப்-பட்டார்கள்.
வரிவிதிப்புப் பிரச்சினைகளில் HUF வித்தியாசமான அணுகுமுறைகளைக் கொண்டது
வருமான வரிச் சட்டம் தனிப்பட்ட முறையில் அமைந்துள்ளது. தன்னை HUF என்று அறிவித்துள்ள ஒரு குடும்பத்தின் வருமானம் பிரத்யேக முறையில் கணக்கிடப்படுகிறது. அந்தக் குடும்பத்தில் தந்தையார், மனைவி, மகள் _- இவர்களும் கூட உள்ளடங்கியிருக்கலாம். அந்தக் குடும்பத்திற்கான சொத்து எதுவும் இருக்க வேண்டியதில்லை.
இந்து வாரிசுரிமைச் சட்டம் – இந்தச் சட்டம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சில சட்டங்களை Hindu Gains of Learning Act. Hindu Women’s Right to Property Act- வெளியேற்றுவது, இந்தச் சட்டங்கள், சுயமாகச் சம்பாதித்தச் சொத்துக்கள். விதவைகளின் உரிமைகள் (ஒரு Copercenary Property யில் இந்து ஆண் மரணமடைந்தபிறகு மகனின் சொத்திற்கு சமமாக பங்கினைப் பெறுவதற்கு) என்ற அம்சங்களை நிதித் துறையில் அறிமுகப்படுத்தியிருந்தன.
இந்தச் சட்டங்கள், குடிமக்கள் வாழ்க்கையில் கொண்டு வந்த முன்னேற்றம் இழக்கப்படவில்லை. இந்திய வாரிசுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு பரம்பரைச் சொத்தில் பங்கு பெறுவதில், இந்து மகள்களின் உரிமைகளை இயற்றிட இந்து வாரிசுரிமைச் சட்டம் வழிகோலியது.
பிரிவு-6 _- மகள்களுக்கு உரிமைகள் கொடுப்பதற்காக, இந்தச் சட்டம், கற்பனாபூர்வமான பாகப் பிரிவினை (Notional Partition) என்ற சட்ட ரீதியான கதையை உள்நுழைத்தது. இதன்படி, இந்தச் சட்டம் தொடங்கிய பிறகு ஒரு இந்து ஆண் மரணமடைய நேர்ந்தால், (பெண் உறவினர்களை உயில் எழுதாமல் விட்ட பிறகு Coparcenary Property யில் அவருடைய பங்கு அவர் இறந்து போன சமயத்தில் பிரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. உண்மையான பாகப் பிரிவினை நடந்தாலும், நடக்காவிட்டாலும்.
அதாவது ஒரு குடும்பம், தந்தை, தாய், இரண்டு மகன்கள், ஒரு மகள் இவர்களைக் கொண்டிருந்தவர் மரணமடையும் நேரத்தில் தந்தையின் பங்கு, கற்பனாபூர்வமான பாகப் பிரிவினைக்குப் பிறகு பரம்பரைச் சொத்தில் கால் பங்காக இருக்கும்.
ஏன் இவ்வாறு பங்கு போடப்படுகிறது?
ஒவ்வொரு மகனும் ஒரு பங்கை Coparcenare என்ற முறையில் எடுத்துக் கொள்வார்கள். மனைவி ஒரு பங்கையும், தந்தை ஒரு பங்கையும் எடுத்துக் கொள்வார்கள். பழைய இந்துச் சட்டத்தின் விதிகளின்படி (இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பயன்பாட்டை விளக்கப்படுத்திய, விரைவுபடுத்திய நீதித்துறை அறிவிப்புக்கள்படி)
தந்தைக்கு சொந்தமான பாகம் அனைத்து வாரிசுகளுக்கிடையில் தாய், மகன்கள், மகள் – மீண்டும், சமமாகப் பங்கிடப்படுகிறது. இந்த நான்கில் ஒரு பங்கு பாகம் நிரந்தரமாக Coparcenary சொத்திலிருந்து பெறப்படுகிறது. மகன்கள், அவர்களுடைய உரிமைகளுக்குட்-பட்டு Coparceners என்ற முறையில், நான்கில் ஒரு பாகத்தைப் பெறுவதோடு மட்டுமின்றி, அவர்களுடைய சொந்த முயற்சியின் மேல் அவர்களுடைய தந்தையின் பிரிவினை செய்யப்பட்ட பாகத்திலிருந்து ஒரு சிறிய பங்கினைப் பெறுகிறார்கள்.
தாயும், மகளும் பெற்றுக் கொண்ட பாகம்
Coparcenary Property யிலிருந்து பெறப்படுகிறது. மகன்களின் பங்குகள் பாகப்ப பிரிவினைக்குப் பிறகு சொத்துக்களாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா? இல்லையா? என்பதைப் பற்றி பல மாநில உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும், வெவ்வேறுபட்ட தீர்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
உயிலும், ஷரத்து 8ம் _- ஒரு Coparcenary சொத்தில் இணைந்துள்ள வட்டியும், உயிலிற்குள் அடங்கும். இந்தப் பங்குகள், பரம்பரைச் சொத்தின் ஆளுமைக்கு / எல்லைக்கு வெளியே இருக்கும். ஒரு தந்தை சுயமாக ஈட்டியச் சொத்தினை விட்டுவிட்டு இறந்துபோகும் போது அவருடைய மகன் அந்த முழுச் சொத்திற்கும் உரிமை கொண்டாட முடியும். ஆனால், பேரப் பிள்ளைகள் அந்தபூர்வீகச் சொத்திற்காக குரல் எழுப்ப முடியாது. ஏனென்றால், அந்தச் சொத்து இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் ஷரத்து 8ன் கீழ் பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு படியிலும், ஒரு சொத்து வாரிசுரிமையால் (ஷரத்து 8) அல்லது உயிருள்ளவரின் உரிமையால் (ஷரத்து 6) அல்லது உயில் வழிவந்த உரிமையால் பெறப்பட்டுள்ளதா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்.
மாநில, மத்திய சட்டத் திருத்தங்கள் _- இந்து வாரிசுரிமைச் சட்டம், 2005ல் மத்திய அரசால், Coparcenary சொத்துக்களில் மகள்களுக்கும் (பெண் பிள்ளைகளுக்கும்) சமபங்கு உண்டு என்று திருத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் இதுபோன்று பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டத் திருத்தங்கள் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு மகள், 30.07.1994 அன்று திருமணமாகாத கன்னியாயிருந்தால், அந்தப் பெண்ணும், மகனைப் போலவே, Coparcenary சொத்தில் சமபங்கு பெற முடியும் என்று கர்நாடக மாநிலம் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு ஒரு மகளும், ஒரு மகனைப் போலவே பிறப்பின் அடிப்படையில் சொத்துப் பங்கிற்கான உரிமை பெறுகிறாள். அந்தப் பெண் மணமாகாமல் இருந்தால் அல்லது குழந்தைகள் பெறாமலிருந்தால், அவர் இறந்து போகும் நிலையில், அவளுடைய Coparcenary சொத்துக்கு அந்தக் குடும்பத்திலுள்ள பிறர் (அந்தப் பெண் உயில் எழுதாமல் இருந்தால்) வாரிசுரிமை கொண்டாட முடியும். அந்தப் பெண்ணிற்கு குழந்தைகள் இருந்தால், உயில் எழுதாமல் இருக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தைகள், வாரிசுரிமையின் அடிப்படையில் அந்தச் சொத்திற்கு உரிமை பெற முடியும்.
கேரளம், மங்களூரிலுள்ள சொத்துக்கள்:
இந்து வாரிசுரிமைச் சட்டத்திற்குப் பிறகு கேரளத்தில் நிலவிவரும் Matrilenial சொத்துப் பிரிவினைகள் என்ற பழங்கால முறை மற்றும் மங்களூரில் உலவி வரும் Aliva Santama சட்டம் _- என்ற சொத்துச் சட்டம் இவை அனைத்திலும் நடைமுறையில் உள்ள சம்பிரதாயத்தின்படி கற்பனாபூர்வமாக பாகப் பிரிவினை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக (per capita) கருதப்படுகிறது. இறந்துபோன ஆணின் பாகம் சிறீணீss மி வாரிசுகளுக்கு போய்ச் சேரும். – தாய், மனைவி, மகள், ஏற்கெனவே இறந்துபோன பிள்ளைகளின் புதல்வர்கள் _- இவர்களுக்கு சரிசமமாகப் பங்கு வைக்கப்படும்.
அனைத்துச் சட்டங்களின் மற்றும் அதனுடைய விரிவாக்கம் / விளக்கம் _- இவற்றின் விளைவு Coparcenary சொத்துக்களின் தொடர்ச்சியான பயன்பாட்டை அறவே ஒழிப்பதுதான். உண்மையான Coparcenary சொத்துக்களிலிருந்து அதிக அளவிலான பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால், நீண்ட காலத்திற்கு அதை நீட்டிக்க முடியாது.