- தலிபான் தலைவர் முல்லா முகமது உமர் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
- சந்திரனில் பூமிக்கு இணையாக அதிக அளவில் தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவின் கேஸ் வெஸ் ரிசர்வ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேம்ஸ்வான் ஓர்மன் தெரிவித்துள்ளார்.
- இன்ஜினியரிங் ரேங்க் பட்டியல் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
- பாலஸ்தீனத்தில் பிறந்து துபாயில் வசிக்கும் சுஜன்னெ (வயது 40) என்ற அரபு நாட்டைச் சேர்ந்த பெண் கடல் மட்டத்திலிருந்து 29, 028 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
- முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவில் மாற்றம் இல்லை என அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
- தமிழ் மக்கள் மீது மனித குல சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க எந்தெந்த வழிகளைப் பயன்படுத்த முடியுமோ அவற்றைப் பயன்படுத்துவோம் என்று பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர் சண் சுதா தெரிவித்துள்ளார்.
- எகிப்தில் நிலத்திற்கு அடியில் புதைந்திருந்த 17 பிரமிடுகள், 1000 கல்லறைகள் மற்றும் 3000 பண்டைய குடியேற்றங்களை பேர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்மதி தொழில் நுட்பத்தினால் கண்டுபிடித்துள்ளனர்.
- அய்.நா. அமைதிப்படைப் பிரிவின் துணைப் பொதுச்செயலாளராக இந்தியாவைச் சேர்ந்த அதுல்காரே பொறுப்பேற்றுள்ளார்.
- மனித உடலில் எம்ஜிமின் _ எல்டிஎல் என்ற கொழுப்பு (கொலஸ்ட்ரால்) இருப்பதை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- மருத்துவம் மற்றும் துணைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஜூன் 30 ஆம் தேதி தொடங்குகிறது.
- சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டக்கூடாது என்பது உள்பட பல கட்டுப்பாடுகள் உள்ளன. கட்டுப்பாடுகளை மீறும் பெண்களுக்குக் கடும் தண்டனை கொடுக்கப்படுவதால், உலக அளவில் பெண்களுக்கான மிகப் பெரிய சிறையாக சவுதி விளங்குவதாக பெண்களுக்கான அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பெண்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை விதித்து வீட்டுக்குள்ளேயே அவர்களை அடைத்து வைப்பதிலிருந்தும் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று சவுதி அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.