– பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
தாய்த் தமிழர் தலைவரே – நம்
தந்தை பெரியார் அடிச்சுவடே!
தாய்த் தமிழின மறுமலர்ச்சித்
தடம் நடக்கும் அரிமாவே!
தாய்த் தமிழர் பகுத்தறிவுத்
தகுதி பெற வாழ்பவரே!
தாய்த்தமிழ் நம் தாயகத்தின்
தன்னேரில் கதிர்மதியே!
ஆசிரியர் அய்யா வாழியவே! வாழியவே!
வீரமணிச் சுடரறிவே!
வெற்றிமணி குலுங்கும் ஓசை
ஆரமணிப் பன்மணி கொள்
அலையோசை உலகமெல்லாம்
சேரமணி ஒசையென
திசையுள்ள தமிழர்களை
ஓரணியில் சேர்ப்பவரே எம்
ஒலியாக இருப்பவரே! வீரமணி அய்யா
வாழியரோ! வாழியரோ!
ஒன்றுமெதிர் பாராதே
ஓயாதே உழைக்கின்றாய்!
தென்றலும் ஓய்வெடுக்கும்
திசைச்சுழற்சிகூட நிற்கும்!
உன் பணிக்கோ ஓய்வுண்டோ?
உவமை கூற ஏதுமில்லை –
தன்னேரில் தமிழ்த் தலைவா!
தனித்தமிழ்போல் வாழியரோ!
சான்றோர் சொல் நானிலத்தில்
தான் வீழ்ந்த வித்தென்பார்!
சான்றாக அமைந்தவனே –
சிங்கை தமிழ் எழுத்தாளர்சங்கச்
சான்றோனே! ஆண்டியப்பா!
சபை பெரியார் அரங்கத்தில் அறிவியல்
சான்றாகச் சொன்ன சொல்லைச்
செயல்கண்டாய்! செயல் வென்றார்
வாழியரோ! வாழியரோ!
ஒரு விளக்கை வாயாலோ
ஊதியுயணைத் திடலாம் – அந்த
ஒரு விளக்கால் பல விளக்கை
ஒளியேற்றவும் செய்யலாம் அந்தத்
திருவிளக்காய் பெரியாரின்
திசைவிளக்காய் இருப்பவரே தமிழர்தம்
கருவிளக்காய் வீரமணி அய்யா
தமிழர் தலைவா நீஒரு
கலங்கரை விளக்கம்
வாழியரோ! வாழியரோ!
ஆண்டியப்பன் உண்மையிலோர்
அண்டியப்பன், தன்னலமில்
தூண்டிலப்பன்! துணை கொண்டார்
தூய அப்பன் – மார்களினை
வேண்டியப்பன் உறவாக்கி தமிழ் காப்பிய
விழாஎடுத்தார். ஒத்துழைத்த
மாண்பு அப்பர்கள் பலர் அவர்க்கெல்லாம்
வீரவணக்கம்! வாழியரோ! வாழியரோ!!
வாழிய சிங்கை எழுத்தாளர் கழகமே
வந்தோர்க்கெல்லாம் வணக்கம்
வாழி! நீடுழி!