அய்ந்தாண்டு சட்டக் கல்வி எங்கு படிக்கலாம்?

நவம்பர் 01-15

1. நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டி, பெங்களூரு

சர்வதேசப் புகழ்பெற்ற சட்டக் கல்வி நிறுவனமான பெங்களூருவில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டி 1986ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தக் கல்வி நிலையத்தில் பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்) என்ற ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு சட்டப் படிப்பைப் படிக்கலாம். வர்த்தகச் சட்டங்கள், மனித உரிமைச் சட்டங்கள், பப்ளிக் பாலிசி உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் முதுகலைப் படிப்புகள் உள்ளன.  தொலைநிலைக் கல்வி மூலமும் பல்வேறு படிப்புகள் நடத்தப்-படுகின்றன.

கிளாட் நுழைவுத் தேர்வு மூலம் இப்படிப்புக்கு பிளஸ் டூ படித்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விவரங்களுக்கு: www.nls.ac.in

2. தி வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ஜூடிசியல் சயின்சஸ், கொல்கத்தா

கொல்கத்தாவில் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தி வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ஜூடிசியல் சயின்சஸ் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிதான் வேந்தர். இங்கு பிஏஎல்எல்பி, பிஎஸ்சிஎல்எல்பி ஆகிய படிப்புகள் உள்ளன. கார்ப்பரேட் அண்ட் கமர்சியல் லா, இன்டர்நேஷனல் அண்ட் கம்பேரட்டிவ் லா ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலைப் படிப்புகள் உள்ளன. ஏர் அண்ட் ஸ்பேஸ் லா, நியூக்கிளியர் லா, பிசினஸ் லா, ஹியூமன் ரைட்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. இதுதவிர, சட்டம் தொடர்பான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளையும் படிக்கலாம்.

விவரங்களுக்கு: http://www.nujs.edu/

3. நல்சார் சட்டப் பல்கலைக்கழம், அய்தராபாத்

அய்தராபாத்தில் உள்ள நேஷனல் அகாதெமி ஆஃப் லீகல் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச் (நல்சார்) கல்வி நிலையம் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கல்வி நிலையத்தில் இளநிலை சட்டப் படிப்புடன் முதுநிலை சட்டப் படிப்பையும் படிக்கலாம். அத்துடன், ஆன்லைன் மூலம் முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளையும் படிக்கலாம்.

விவரங்களுக்கு: www.nls.ac.in

4. நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஜோத்பூர்
ராஜஸ்தானில் ஜோத்பூரில் உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி 1999_ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பிபிஏஎல்எல்பி (ஆனர்ஸ்), பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்), பிஎஸ்சிஎல்எல்பி (ஆனர்ஸ்) ஆகிய இளநிலை சட்டப் படிப்புகள் உள்ளன. கார்ப்பரேட் லா, இன்டர்நேஷனல் புராப்பர்ட்டி ரைட்ஸ், இன்டர்நேஷனல் டிரேட் லா, பேங்கிங் அண்ட் பைனான்ஸ், சைபர் லா அண்ட் சைபர் செக்யூரிட்டி ஆகிய பாடப் பிரிவுகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகள் உள்ளன.

விவரங்களுக்கு: www.nlujodhpur.ac.in

5. நேஷனல் லா யுனிவர்சிட்டி, டில்லி

டில்லியில் உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி 2008_லிருந்து செயல்பட்டு வருகிறது. இங்கு பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்) அய்ந்து ஆண்டு படிப்பைப் படிக்கலாம். இந்தப் படிப்பில் சேருவதற்கு அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வை (AILET) எழுத வேண்டும். இது தவிர, முதுநிலைப் படிப்புகளும் அர்பன் என்விரான்மெண்ட் லா அண்ட் மேனேஜ்-மெண்ட், டூரிஸம் அண்ட் என்விரான்மெண்ட் லா ஆகிய பாடப்-பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.

விவரங்களுக்கு: www.nludelhi.ac.in

6. நேஷனல் லா இன்ஸ்டிட்யூட் யுனிவர்சிட்டி, போபால்

மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள நேஷனல் லா இன்ஸ்டிட்யூட் யுனிவர்சிட்டி 2001_ஆம் ஆண்டு முதல், மாணவர்களைச் சேர்த்து வருகிறது. இங்கு பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்) படிப்பு உள்ளது. அத்துடன் ஹியூமன் ரைட்ஸ், இன்டலக்சுவல் புராப்பர்ட்டி அண்ட் பிசினஸ் லா, கான்ஸ்டிடியூஷனல் அண்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் லா, பிசினஸ் லா அண்ட் கிரிமினல் லா ஆகிய சிறப்புப் பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கலாம். சைபர் லா அண்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் முதுநிலைப் பட்டப் படிப்பையும் சைபர் லாவில் முதுநிலை டிப்ளமோ படிப்பையும் இங்கு படிக்கலாம்.

விவரங்களுக்கு: www.nliu.ac.in

7. கேம்பஸ் லா சென்டர், யுனிவர்சிட்டி ஆஃப் டில்லி, டில்லி

டில்லிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பழைமை வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனம் சிஎல்சி என்று அழைக்கப்படும் கேம்பஸ் லா சென்டர். 1924_ஆம் ஆண்டில் சட்டப் படிப்புக்காக டில்லி பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்ட தனித் துறை இது. இங்கு மூன்று ஆண்டு சட்டப் படிப்பு கற்றுத் தரப்படுகிறது. இதுதவிர சட்டம் தொடர்பான முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளையும் படிக்கலாம்.

விவரங்களுக்கு: http://clc.du.ac.in/

8. குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி காந்தி நகர்

காந்தி நகரில் உள்ள குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி 2004ஆம் ஆண்டு தொடங்கப்-பட்டது. பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்), பிகாம்-எல்எல்பி (ஆனர்ஸ்), பிஎஸ்சிஎல்எல்பி (ஆனர்ஸ்), பிஎஸ்டபிள்யு எல்எல்பி (ஆனர்ஸ், பிபிஏஎல்எல்பி (ஆனர்ஸ்) ஆகிய இளநிலை சட்டப் படிப்புகள் இங்கு உள்ளன. இதுதவிர முதுநிலை படிப்புகளும் ஆன்லைன் மூலம் படிக்கக் கூடிய டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.

விவரங்களுக்கு: http://www.gnlu.ac.in/

9. ஹிதயதுல்லா நேஷனல் லா யுனிவர்சிட்டி, ராய்ப்பூர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் செயல்பட்டு வரும் ஹிதயத்துல்லா நேஷனல் லா யுனிவர்சிட்டியில் பிஏஎல்எல்பி (ஆனார்ஸ்) படிக்கலாம். இந்த சட்டப் படிப்பில் சேர கிளாட் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இங்கு சட்ட முதுநிலைப் படிப்புகளும் ஆய்வுப் படிப்புகளும் உள்ளன.

விவரங்களுக்கு: www.hnlu.ac.in

10. லா ஸ்கூல், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும்.

விவரங்களுக்கு: www.bhu.ac.in

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *