பெண்கள் வேலைக்குச் செல்வதுதான் வேலையின்மைக்குக் காரணமா?
அகிலன் சேகர் தமிழ்: அதெல்லாம் ஒன்னும் கிடையாது. அதெல்லாம் வேலைக்குப் போக முடியாதவன் சொல்வது
எ.மாரியப்பன்: வேலை எல்லோருக்குமானது பொதுவானது ஆகவே வேலையின்மைக்கு காரணமாக பெண்கள் மேல் பழி சுமத்துவது இருக்க முடியாது கூடாது. பட்டதாரிகள் வருடாவருடம் பெருகி கொண்டே இருக்கிறார்கள் அதற்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் பெருகாமல் இருப்பதே காரணம்.
ரகுநாதகுருசாமி: பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் காரணம் கலைஞர் ஐயா கொண்டுவந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு, வேலையின்மைக்குக் காரணம் வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்காத அரசுதானே ஒழிய பெண்கள் அல்ல.
எச். மொகமத் ரபிக்: அரசின் கையாலாகாத்தனமே காரணம்
சுரேஷ் குமார்: பெண்கள் குடும்பவளர்ச்சிக்கு பெரிதும் உதவ வேண்டும்; தன்காலில் நிற்க வேண்டும் அதனால் செல்கின்றனர். வேலையின்மைக்கு அது காரணமல்ல
கமல் ரோசி பிள்ளை: பெண்கள் காரணமல்ல.
முகிலன் முகிலன்: சோம்பேறி மனம் எப்படியெல்லாம் கற்பனை செய்கிறது! பெண்களுக்குரிய உரிமை, தேவை. அதிக வேலையை அரசு தரவேண்டும்.
தன்யா அன்பு: பெண்கள் காரணமல்ல. அரசுதான்!
போனெக்ஸ் பாலா: வேலையின்மைக்கு அரசுதான் காரணமே யன்றி பெண்கள் அல்ல.
இந்த இதழுக்கான கேள்வி:
வரலாற்றைத் தங்களுக்குச் சாதகமாக திரிக்க முயலும் இந்துத்வா வாதிகள் பற்றி உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்