காசி இந்து சர்வகலாசாலையில் பார்ப்பனர்களான சாஸ்திரிகளும் சர்மாக்களும் மட்டுமே படித்துக் கொண்டிருந்தனர். நாடு விடுதலை அடைந்தவுடன் தகுதி திறமை உள்ள அனைவரும் படிக்கலாம் என்று தீர்மானித்தனர் பல்கலைக்கழக நிர்வாகிகள். பார்ப்பனர்கள் எதிர்த்தனர். உள்துறை அமைச்சர் பட்டேலிடம் தூது சென்றனர். அவர் நேருவைப் போய் பாருங்கள் என்றார். நேரு அவர்களை சந்திக்கவே மறுத்துவிட்டார். நாடும், நாட்டினை ஆளவந்தவர்களும், காந்திக்குக் கட்டுபட்டவர்களே என்று காந்தியிடம் சென்று தங்கள் குறைபாட்டினை தெரிவித்தனர். வந்தவர்களைப் பார்த்த காந்தியார் என்ன கூட்டமாக வந்திருக்கிறீர்கள்; வந்த நோக்கமென்ன? என்றார்.
இதுவரை நாங்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த காசி இந்து சர்வ கலாசாலையில் தகுதியுள்ள அனைவரும் படிக்கலாம் என்று கூறுகின்றனர். அதில் எங்களுக்கு உடன்-பாடில்லை. அதைத் தாங்கள் தடுத்து நிறுத்தவேண்டுமென்றனர், வந்தவர்கள். இதுவரை நீங்கள் மட்டுமே படித்ததாக கூறுகிறீர்கள்! இனிமேல் மற்றவர்களும் படிக்கட்டுமே, அதனால் உங்களுக்கு நட்டமென்ன? காந்தியார்! அது சாஸ்திர விரோதம்! வந்தவர்கள்! உங்கள்- சாஸ்திரத்தை நானறிவேன்! காந்தியார்! வர்ணாசிரம தர்மப்படி அது சரியல்ல! வந்தவர்கள்! வர்ணாசிரம தர்மப்படி பார்ப்பனர்களின் வேலை கற்பது கற்பிப்பது! நீங்கள் ஆற்றங்கரை ஓரத்திலும், குளத்தங்கரை அருகிலும் தர்ப்பைப் புல்லை கையிலேந்தி வருகிறவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள்! வந்திருந்த பார்ப்பனக் கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தனர்.
வாய் மூடிமவுனிகளாக கலைந்து சென்ற 30ஆவது நாள் காந்தியார் படுகொலை செய்யப்பட்டார்; பார்ப்பனர்கள் பொறியாளராய், மருந்துவராய் வரவிரும்புவது சரியல்ல வென்று காந்தியார் சொன்னார். பார்ப்பனர்கள் குலதர்மப்படி வேதம் தானே ஓதவேண்டும்! அவர்கள் மற்றத் தொழிலுக்கு ஆசைப்படுவது தவறல்லவா? என்றார். காந்தி! அதுமட்டுமல்ல அரசியலில் மத்ததைக் கலக்கக் கூடாது என்றார். இவ்வாறு சொன்ன சில வாரங்களிலே, பார்ப்பனன் கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்!
பெரியார் காந்தியாரிடம், நீங்கள் பார்ப்பனர்களுக்கு ஆதரவாய் இருக்கும் வரை உங்களை விட்டு வைப்பார்கள்! எதிர்க்கத் தொடங்கினால் உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதை உரைத்துவிட்டு வந்து சரியாக இருபது ஆண்டுகளில் காந்தியை கோட்சே எனும் கொடிய பார்ப்பான் கட்டுக் கொன்றான்! ஏன்? பெரியார் சந்திப்பிற்குப்பின் பார்ப்பனர்-களின் நடவடிக்கைகளை கூர்ந்து நோக்கிடத் தலைப்பட்டார் காந்தியார்! நாடு விடுதலை அடைந்தது. நாட்டில் இயல்பாக பல மாற்றங்கள் விளைந்தது. விடுதலை பெற்று சரியாக 168 நாட்களில் காந்தியார் சுடப்பட்டார். காந்தியார் கொல்லப்பட மூளையாய் செயல்பட்ட சவர்க்கார் படத்தை காந்தியார் படத்தின் அருகில் நாடாளுமன்றத்தில் வைத்துள்ளனர் பி.ஜே.பியினர்.