கல்!
கோயில் திருவிழாவில் இரண்டு ஊர்களுக்கு இடையே
சண்டை மூண்டது.
கோழி அறுப்பதா?
ஆடு வெட்டுவதா என்று,
கோழியும், ஆடும் உயிரோடிருக்க
வெட்டிக் கொண்டு செத்தனர்
இரண்டு ஊர்களிலும் ஆறுபேர்.
ஊரெங்கும்
ஒரே பதட்டம்!
கடவுள் மட்டும்
எப்போதும் போல கவலை படாமல் இருந்தார்
கல் என்பதால்.
மூலத்தை ஒழிப்போம்!
இந்துமத சாக்கடைக்கு நீர் பாய்ச்சிக் கொண்டே
சாதிக் கொசுவால் உண்டாகும்
தீண்டாமை யானைக்கால் நோய்
ஒழிக்க முயற்சி!
துளிப்பா
அருள் வாக்கு சொல்லும்
சாமியார் வீட்டில்
திருட்டு.
உண்டியல் இல்லா
கோயில்கள் இல்லை
காசேதான் கடவுளடா!
எம் மதமும்
சம் மதம் இல்லை
தந்தை பெரியார்
திருச்செந்தூர் முருகனின்
கைவேல் திருட்டு
சூரசம் மாரம்?
அழிக்கும் கடவுள்
உண்மைதான்
கடவுள் பெயரால் தானே
கணக்கற்ற இறப்பு! – புதுவைத் தமிழ்நெஞ்சன்.
அறிவாளி!
எந்த ஒரு முட்டாளாலும் கூறமுடியும்
கடவுள்
உண்டு என்று!
ஆனால், ஒரு
அறிவாளியால்தான்
கூறமுடியும்
கடவுள் இல்லவே
இல்லையென்று!
– கவிஞர். கணக்கப்பா
நானும் தூக்குவேன்!
சிவகாமி சினந்து கேட்டாள்
நடராஜப் பெருமானை
இப்போது போட்டியிட்டு
என்னோடு ஆடத்தயாரா?
சுடிதார் வந்துவிட்ட
சூட்சமம் புரிந்ததால்
முடியாது என்று
மும்முறை ஆட்டினார்
கால்தூக்கும் தத்துவம்
காலத்தால் தகர்ந்தது
உடையின் மாற்றத்தால்
ஒழிந்தது ஆண்மை!
– சிகரம்.