லாரியில் நிறுத்தி ஏற ஓட்டுநரிடம் அண்ணா சொன்னது இது! எங்கே, எப்போ, ஏன்? கீழே படியுங்கள்!
அண்ணா ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறப்பாக உரையாற்றக் கூடியவர். அவரது பேச்சில் நேரு பலமுறை மயங்கி, வியந்து பாராட்டியுள்ளார். அயல்நாட்டாரும் அவரது ஆங்கிலப் புலமையைக் கண்டு புகழ்ந்தனர்.
போடிநாயக்கனூர் அருகே ஓர் ஊரில் அண்ணா பேசும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடைக்கானல் சாலை இரயில்வண்டி நிலையத்தில் அண்ணாவும் டி.கே.சீனிவாசனும் இறங்கினர். அங்கிருந்து பேருந்தில் கூட்டம் நடக்கும் ஊருக்குப் போக வேண்டும். பேருந்து நீண்டநேரமாகியும் வரவில்லை. வந்த பேருந்தும் இடமில்லாமல் சென்றுவிட்டது.
அப்போது அந்த வழியே வந்த லாரியை அண்ணா நிறுத்தினார். எப்படியாவது எங்களை ஏற்றிச் சென்று கூட்டம் நடக்கும் ஊரில் விடுங்கள். நாங்கள் போகாவிட்டால் கூட்டம் நடக்காமல் போய்விடும் என்றார் அண்ணா.
போய்யா! நீ பெரிய அண்ணாதுரையா! நீ போகாட்டி கூட்டம் நடக்காதா? என்றார் லாரி ஓட்டுநர் கேலியாக.
நான்தானய்யா அந்த அண்ணாதுரை என்றார் அண்ணா!
ஓட்டுநர் மகிழ்ச்சியோடு ஏற்றிச்சென்று விட்டதோடு, கூட்டம் முடியும்வரை அண்ணாவின் பேச்சைக் கடைசிவரை கேட்டுவிட்டுச் சென்றார்.
உண்மையான மக்கள் தொண்டர்கள் அன்றைக்கு இப்படித்தான் ஊர்ஊராய்ச் சென்று கொள்கைப் பரப்பினர். இன்று 10 கி.மீ. போக ஹெலிகாப்டர் கேட்கிறார்கள்!