அரிய செய்திகள்

அக்டோபர் 01-15

இராஜாஜி செய்த கொலை!

இராஜாஜி சேலத்தில் தொழில் செய்து வந்த காலத்தில் நாமக்கல்லில் டி.விஜயராகவாச்-சாரியர் என்பவர் மாவட்ட துணை ஆட்சியராக  இருந்தார். அவருடைய நீதிமன்றத்தில் அடிக்கடி தோன்றுவார் இராஜாஜி அவர்கள். இராஜாஜி அவர் களுடைய மதிநுட்பத்தையும், வாதத் திறமையையும் கண்ட நீதிபதிக்கு அவரிடம் மிகுந்த பற்று உண்டாயிற்று. அதுவே பின்னர் இவ்விருவருக்கும் ஏற்பட்ட நட்புக்குக் காரணமாக இருந்தது.

ஒரு நாள் இரவு நடுநிசி அக்காலத்தில் இக்காலத்தைப்போல் பிரயாணத்திற்கு மோட்டார் வண்டிகள் இல்லை. ஒரு கொலை விசாரணை வழக்கு சம்பந்தமாக நாமக்-கல்லுக்குச் சென்றிருந்த இராஜாஜி திரும்பி வருவதற்கு நேரமாகி விட்டது. குதிரை வண்டியில் சேலத்திற்கு வந்து கொண்டிருந்தார். அக்காலத்தில் வழியில் கொலை களவுகள் நடப்பது வெகு சாதாரணம். ஆகையால் தமது கைத்துப்-பாக்கியில் ரவைகள் போட்டுத் தற்காப்புக்கெனத் தயாராக வைத்திருந்தார். வண்டியிலிருந்த இராஜாஜி நன்றாக உறங்கி விட்டார். வழியில் ஒரு சுங்கச்சாவடி. அங்கே வண்டி நின்றது. காவற்காரன் சுங்கப்பணம் வசூல் செய்ய வண்டியின் பின்புறம் சென்றான். உறங்கிக் கொண்டிருந்த இராஜாஜி கண் விழித்தார். தம்மை யாரோ தாக்க வந்து விட்டதாக நினைத்தார். அரைத் தூக்கம் ஆயினும் குறி தவறாது கைத்துப்பாக்கியை எடுத்துக் காவற்காரனைச் சுட்டுவிட்டார்.

காவற்காரனும் மண்ணில் சாய்ந்தான். இதற்குள் அவர் தூக்கமும் கலைந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் பலர் அங்கே கூடிவிட்டனர். விளக்கெடுத்து வந்து பார்த்தபோது சுடப்பட்டவன் காவற்காரன் என்று உணர்ந்தார். தமது தவறை உணர்ந்த இராஜாஜி மிகவும் வருந்தினார். அவனை உடனே வண்டியில் ஏற்றிக் கொண்டு மருத்துவ-மனைக்குக் கொண்டு சென்றார். வழியிலேயே அவன் இறந்து விட்டான்.

இராஜாஜியின் பேரில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு வழக்கும் நடந்தது. இருட்டில் தற்காப்புக்காகச் சுட்டார் என்று நீதிபதி வழக்கைத் தள்ளிவிட்டார்.

(இராஜாஜி வாழ்க்கை வரலாறு பக்கம் -20, 1949இல் வெளியானது)

கொலை செய்ய வேண்டாம் இன்னொரு-வரை கைநீட்டி அடித்தார் பெரியார் என்று ஒரே ஒரு நிகழ்வைக் கூற முடியுமா?
* * *
கேரளாவில் அண்மைக்காலம் வரை தமிழே பேசப்பட்டது கேரளா தூய்மையான தமிழ் பேசிய, தமிழர்களான சேர மன்னர்கள் ஆண்ட நாடு. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய மண். ஆனால், ஆரிய பார்ப்பனர் ஊடுருவலால், சமஸ்கிருதம் தமிழில் கலந்து மலையாளமாய் மாறிற்று.
கேரளாவில் மட்டஞ்சேரி என்ற சிறு தீவில் அதாவது கொச்சி நகரத்தில் யூதர்கள் சாலமன் காலத்தில் குடியேறியபோது, அவர்களுக்கு அப்போது கேரள மன்னன் குடியுரிமை அளித்தான். அந்த ஆவணம் தமிழில்தான் எழுதப்பட்டுள்ளது. அப்படியென்றால் அன்றைய நிலையில் தமிழே கேரளாவில் பேசப்பட்டது என்பதும் மலையாளம் உருவாகவில்லை என்பது உறுதியாகிறது.

* * *

எம்டன் என்றால் என்ன?

ஆள் பெரிய எம்டன் என்று சொல்வது கிராமங்களில்கூட வழக்கில் உள்ளது. இந்த வழக்கு எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு வரலாற்று நிகழ்வின் காரணமாக வந்தது,

எம்டன் என்பது ஜெர்மன் போர்க்கப்பலின் பெயர். முதலாம் உலகப் போரில் இந்தியப் பெருங்கடலில் சுற்றித் திரிந்தது. அது ஆங்கிலக் கப்பல்களை அச்சுறுத்த வங்கக் கடலுக்கு 1914ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி சென்னைத் துறைமுகத்திற்கு திடீர் என வந்தது. குண்டுகளை வீசி கலங்கடித்துச் சென்றுவிட்டது. இப்படி அதிரடியாய் அக்கப்பல் செய்ததால் அதிரடியாட்களை எம்டன் என்று சொல்வது வழக்கில் வந்தது. அது வீசிய குண்டுகளில் ஒன்று சென்னை உயர்நீதிமன்ற கீழ்ப்புற மதில்சுவற்றில் வீழ்ந்தது. நீதிபதிகள் நுழைவாயில் அருகில் உள்ள அவ்விடத்தில் அதுபற்றிய கல்வெட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *