பூணூல் என்பது கோவணம் கட்டும் கயிறே! சொன்னவர் சுவாமி விவேகாநந்தர்.
சிஷ்யனானவன் குருவினுடைய குடிலுக்கு செல்லும்போது குரு அவனுடைய தகுதியை அறிந்து, உள்ளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீட்சை செய்து வேதங்களை போதிப்பார். இடுப்பில் கட்டிய அந்த முப்புரி கயிற்றில் சிஷ்யன் கோவணம் கட்டிக்-கொள்வான்.
அந்த புல்லிற்கு பதிலாக முப்புரி நூலை அணியும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது. வேதங்களிலே பூணூலைப் பற்றிய குறிப்பு ஓரிடத்திலேயும் இல்லை. கோபிலருடைய கிருஹய சூத்திரங்களிலும் பூணூலுக்கான குறிப்புகள் இல்லை. எனவே, இன்றைக்கு பார்ப்பனர்கள் அணியும் பூணூல் கோவணம் கட்டிய நூலின் மாற்றமே! —என்கிறார் சுவாமி விவேகானந்தர்
(ஆதாரம் : சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் நூல் பக்கம் : 26-28.)
சாஸ்திர வேத விரோதமாய் தன்னை உயர்ந்த ஜாதியாய் காட்ட பார்ப்பனர்கள் பின்னாளில் செய்த மோசடியே பூணூல் அணியும் வழக்கம். என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
நான் ஒரு பவுத்தன்!
புத்தரே எனது விருப்பமான தெய்வம். நான் பவுத்த மதத்தவன் அல்ல. ஆனாலும் நான் ஒரு பவுத்தன். (I am not a Buddist and Yet I am) என்கிறார் விவேகாநந்தர்.
(தொகுதி 1 பக்கம் 21)
காரணம் பவுத்தம் ஒரு மதம் அல்ல. அது ஒரு சங்கம், அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் வேதாந்தம் எதிர் காலமதமா? என்னும் தலைப்பில் பேசிய விவேகாநந்தர், இந்துமதக் குழப்பக் குப்பைக் கொள்கையான வேதங்களை நான் வேதம் என்று சொல்லவில்லை. எல்லா மதங்களிலும் உள்ள இறுதிநிலை பற்றிய கருத்துக்களையே நான் வேதம் என்கிறேன் என்றார்
இந்துமதத்தில் ஏதாவது சிறப்புகள் இருக்கிறது என்றால் அது பார்ப்பனர் அல்லாதாரால் வந்தவை. இழிவு அநீதி அனைத்தும் ஆரியபார்ப்பனர்களால் வந்தவை பார்ப்பனர்கள் எதையும் தங்கள் நலத்துக்கு மட்டுமே கூறுவர், செய்வர் என்கிறார் விவேகாநந்தர்.
(தொகுதி 4 பக்கம் 359)
பரம்பரையாகத் தான்படிப்பு வருமா? விவேகாநந்தர் கேட்கிறார்.
ஏ பிராமணர்களே! பறையனைவிடப் பிராம்மணனுக்குக் கல்வி கற்கும் சக்தி இருக்கிறதெனின், பிராமணர்கள் படிக்க இனி செலவு செய்யக் கூடாது. அவ்வளவு பணத்தையும் அரசு பறையர்கள் படிப்பிற்குச் செலவிடுங்கள். பலவீனமானவர்களுக்கே எல்லா உதவியும் கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்களுக்குத்தான் அதுதேவை. பிராமணன் பிறவியிலே அறிவுள்ளவனாகப் பிறந்திருந்தால் அவன் தானே படித்துக் கொள்ள முடியும். பிறவியில் அறிவில்லாதவர்களுக்குத் தானே அதிகம் போதனை வேண்டும்? எனக்குத் தெரிந்த வரை இதுவே நியாயம்!
[நூல்: இந்தியப் பிரசங்கங்கள் : (பக்கம். 62-63) இராமகிருஷ்ணாமடம் வெளியீடு.]
பார்ப்பனர்களே இந்த நாட்டைவிட்டே ஓடுங்கள்!
பார்ப்பனர்களே இந்த நாட்டை விட்டே ஓடி-விடுங்கள்! அல்லது இந்த மண்ணில் கரைந்து, காற்றில் கலந்து மறைந்து விடுங்கள்! அப்போதுதான் இந்தநாடு எழுச்சிபெரும் ஏற்றம்பெரும்! நீங்கள் சூன்யம்! நீங்கள் மாயை! கானல் நீர்! மக்களை நாசமாக்கும் குழப்பல் பேர்வழிகள்!
ஆரிய வம்சத்திலிருந்து தோன்றியதாகப் பெருமை அடித்துக் கொள்ளும் பார்ப்பனர்களே; நீங்கள் எவ்வளவுதான் பெருமை பேசினாலும், எவ்வளவுதான் புகழ் இசைத்தாலும்; உங்கள் குலப்பெருமை உணர்ச்சியினால் கர்வமடைந்து சொகுசு நடைப்போட்டாலும், உங்களுக்கு உயிர் இருப்பதாக, சிந்தனை இருப்பதாக ஏற்க இயலாது. பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மி சவம்போல இருக்கிறீர்கள். நீங்கள் யாரை சவம் என்று வெறுத்து ஒதுக்கினீர்களோ அவர்களிடையே தான் (ஒடுக்கப்பட்டோர்) பாரதத்தின் எதிர்கால வீரிய சக்தி எஞ்சி நிற்கிறது!
மாயை நிறைந்த இவ்வுலகில் நீங்கள் தான் உண்மையான மாயை; புரியாத புதிர்; பாலைவனத்தில் காணப்படும் கானல்நீர். பாரதத்தின் உயர் வகுப்பாரே உங்களைத் தான் சொல்கிறேன் நீங்கள் இறந்த காலத்தின் பிரதிநிதி. அதில் எல்லா விதமான வடிவங்களும் ஒரே குளறுபடியாகக் கலந்து கிடக்கின்றன.
நீங்கள்தான் சூன்யம். வருங்காலத்தில் உருப்படியில்லாமல் போகப்போகிற திண்மை-யில்லா வஸ்துக்கள். கனவு உலக வாசிகளே நீங்கள் இன்னும் ஏன் நடமாடுகிறீர்கள்?
கடந்து போன பாரதத்தின் சதையற்ற, இரக்கமற்ற வெற்று எலும்புக் கூடுகளாகிய நீங்கள் ஏன் மண்ணில் கரைந்து, காற்றிலே கலந்து மறைந்து விடக்கூடாது?
இந்த நாட்டின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் எல்லாம் உங்கள் கையுள். நாற்ற மடிக்கும் உங்கள் கரங்களிலிருந்து அவற்றை விடுவித்து உரியவர்களிடம் சேர்க்கும் வாய்ப்பு இதுவரை உங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்பொழுது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், கல்வியும், ஞான ஒளியும், சுதந்திரமாகக் கிடைக்கும் இந்த நேரத்தில் உரியவர்களிடம் ஒப்படையுங்கள். ஆம் முடிந்த அளவு விரைவாய் அவற்றை ஒப்படையுங்கள், நீங்கள் சூனியத்தில் முழ்கி மறைந்து விடுங்கள், நீங்கள் விலகிய இடத்தில் நவபாரதம் எழட்டும். நவ பாரதமானது உழவனின் குடிசையிலிருந்து ஏர் பிடித்து வெளிவரும்; மீனவர், சக்கிலியர், தோட்டி இவர்களின் குடிசைகளிலிருந்து நவ பாரதம் வெளித் தோன்றும். பல சரக்குக் கடைகளிலிருந்து, தோசை விற்கிறவனின் அடுப்படியிலிருந்து நவ பாரதம் தோன்றட்டும். தொழிற்சாலை-களிலிருந்தும், கடையிலிருந்தும், சந்தை-யிலிருந்தும் நவ பாரதம் காட்சி தரட்டும். தோட்டங்களிலிருந்தும், காடுகளிலிருந்தும், குன்றுகளிலிருந்தும், மலைகளிலிருந்தும், அந்த நவ பாரதம் வெளிவரட்டும்.
இந்தப் பாமர மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கி நசுக்கப்பட்டிருக்கிறார்கள். முணுமுணுக்காமல் கஷ்டங்களைச் சகித்திருக்கிறார்கள். அதன் விளைவாக ஆச்சரியகரமான பொறுமையும் தைரியமும் பெற்றுள்ளார்கள்.
முடிவில்லாத துன்பத்தை அவர்கள் அநுபவித்ததன் பயனாக, வளையாத ஆண்மைச் சக்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவு தானியத்தை வைத்துக் கொண்டு, உயிர் வாழ்ந்து அவர்கள் இந்த உலகத்தையே உலுக்கி ஆட்டி விடுவார்கள். அவர்களுக்கு அரை வயிற்று உணவு கொடுங்கள். பிறகு தோன்றுகிற அவர்களது சக்தியைப் பாருங்கள். இந்த உலகமே கொள்ளாது. ரக்த பீஜனுக்கிருந்த குன்றாத சக்தி இவர்களுக்கும் அருளப்பட்டிருக்கிறது. (ரக்த பீஜன் துர்க்கா சப்த சதியில் வருகிற ஓர் அரக்கன். அவனுடைய ஒவ்வொரு சொட்டு இரத்தமும் கீழே சிந்தினால் அவனைப் போன்றே மற்றொரு ராட்சதன் தோன்றுவான்) அத்துடன் கூடத் தூய்மையும் நல்லொழுக்கமும் வாய்ந்த வாழ்க்கையிலிருந்து தோன்றுகிற அற்புதமான வலிமை அவர்களுக்கு உண்டு. உலகத்தில் இதனை வேறு எங்குமே காண முடியாது. இதுபோன்ற அமைதி, இதுபோன்ற திருப்தி, இத்தகைய அன்பு இதுபோன்ற மௌனமாகவும் இடைவிடாமல் வேலை செய்துசெயல்படுவது, நேரம் வரும்பொழுது இதுபோன்று சிங்கத்தின் பலத்துடன் வேலை செய்வது இத்தகைய காட்சியை உங்களால் வேறு எங்குதான் காண முடியும்?
நீங்கள் காற்றில் கலந்து மறைந்து போங்கள். இனி ஒருகாலும் கண்ணுக்குத் தெரியாமல் போய் விடுங்கள். உங்கள் காதுகளை மட்டும் திறந்து வைத்தால் போதும். நீங்கள் மறைந்து போகிற அந்தக் கணமே புத்தெழுச்சி பெற்ற பாரதத்தின் முதல் முழக்கத்தைக் கேட்பீர்கள். கோடிக் கணக்கான இடியொலிகள் கலந்தாற் போல உலகெங்கும் எதிரொலி செய்ய வாஹ் குரு கீ பதேஹ் குருதேவருக்கு ஜே என்ற முழக்கம் வானோங்கி எழும் என்றார் விவேகாநந்தர்.