பதிவுகள்

ஜூன் 16-30
  • மே 28 அன்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில், 496 மதிப்பெண்கள் பெற்று 5 மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.  தேர்ச்சி சதவிகிதம் 85.3. 495 மதிப்பெண்களை 11 மாணவ மாணவிகளும் 494 மதிப்பெண்களை 24 பேரும் பெற்றுள்ளனர்.
  • சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சபாநாயகர் அறையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மே 30 அன்று 12 ஆவது முறையாக எம்.எல்.ஏ. பொறுப்பேற்றார்.
  • அரசு சுகாதார மய்யங்களில் பெண்களுக்கான இலவச பிரசவத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜூன் 1 அன்று தொடங்கி வைத்தார்.
  • கருநாடக சட்டசபையில் ஜூன் 2 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றிபெற்றது. எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், சுயேச்சை எம்.எல். ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
  • ஊழலுக்கு எதிராக டில்லி ராம்லீலா மைதானத்தில் ஜூன் 4 அன்று உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவை காவல் துறையினர் ஜூன் 5 இல் அப்புறப்படுத்தினர்.
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் கல்மாடியின் ஜாமீன் மனு சி.பி.அய். நீதிமன்றத்தில் ஜூன் 6 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
  • காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி மீது ஜூன் 6 அன்று ஷூ வீச முயற்சி நடந்தது. இதற்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வினர் என்று திவேதி கூறியுள்ளார்.
  • சமச்சீர் கல்வி நிறுத்தம், சட்ட மேலவை ரத்து போன்ற தீர்மானங்கள் ஜூன் 7 அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.  தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. வினர் வெளிநடப்பு செய்தனர்.
  • சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களை ஒரே குழுவாக உட்கார அனுமதிக்காமல் தனித்தனியாக உட்கார வைத்துள்ளதால் பாதுகாப்பில்லை என்று குற்றம் சுமத்தி, சட்டமன்றக் கூட்டத்தொடரைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் ஜூன் 9 அன்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *