ரூபாய் 10 ஆயிரம் பரிசு!
தந்தை பெரியாரின் 137ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு
பகுத்தறிவு சிறுகதை பரிசுப் போட்டி!
உண்மை (மாதம் இருமுறை) இதழ் சார்பில் சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. சிறுகதை மூன்று பக்க அளவில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்.
இதுவரை வெளிவராதவை என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும்.
முதல் பரிசு ரூ.4,000
இரண்டாம் பரிசு ரூ.2,000
மூன்றாம் பரிசு ரூ.1,000
தரமான மற்ற சிறுகதைகள் உண்மை இதழில் வெளியிடப்படும்.
கவிதைப் போட்டி
உண்மை இதழுக்கு கவிதைப் போட்டிக்கு கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை வெளியிடப்படாதவை என்ற உறுதியளிக்க வேண்டும். கவிதைகள் 10 வரிகளில் இருக்க வேண்டும். துளிப்பாக்களாக இருப்பின் 3 அனுப்பவும்.
முதல் பரிசு ரூ.1,500
இரண்டாம் பரிசு ரூ.1,000
மூன்றாம் பரிசு ரூ. 500
தரமான மற்ற கவிதைகள் உண்மையில் வெளியிடப்படும். நடுவர் முடிவு இறுதியானது. படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர், உண்மை இதழ், பெரியார் திடல், சென்னை–_7
படைப்புகளை 31.08.2015 தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கவும்.
குறிப்பு: சிறுகதை மற்றும் கவிதைகள் மனிதநேயம், ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, ஜாதி மறுப்பு மணம், விதவை மணம், பகுத்தறிவு போன்ற புரட்சிச் சிந்தனைகளைக் கருவாகக் கொண்டிருக்க வேண்டும்.