ஆசிரியர் பதில்கள்

ஆகஸ்ட் 01-15

கேள்வி : டாஸ்மாக் கடை மூடுவதில் கலைஞர் மவுனம் சாதிப்பது ஏன்? மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்; அரசுக்குக் கிடைக்கும் வருவாய் தனிப்பட்டவருக்குப் போகும் என்று எண்ணுகிறாரா? தங்கள் கருத்து என்ன? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : டாஸ்மாக் ஏற்படுத்திய விளைவு கொடுமையானது. குடிப்பழக்கம் குழந்தைக்கும்  வரவேண்டும் என்று எண்ணுகிற நல்ல குடிமகன்கள் உள்ள நிலையில், மதுவிலக்கும் அதேநேரத்தில் கள்ளச் சாராயத் தடுப்புக்குரிய சரியான நடவடிக்கைகளும் _ சட்டங்களும் _ கண்காணிப்பும் பல்முனைத் தாக்குதல்போல் நடத்தப்பெற வேண்டும் என்பதே நம் கருத்து.

கேள்வி : தேசிய கீதத்தில் மாற்றம் செய்யக்கோரி ராஜஸ்தான் மாநில ஆளுநர் கூறியுள்ள கருத்துக்கள் அரசியல் சட்ட விதிகளுக்கு முரண் இல்லையா? இவர் மீது ஜனாதிபதி நேரடியாக நடவடிக்கை எடுக்க இயலுமா? – நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்

பதில் : அது ஒரு கருத்து. கருத்துக் கூறியதற்காக எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? அவர் மாற்றி சட்டமோ, ஆணையோ பிறப்பிக்கவில்லையே!

கேள்வி : தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சியைக் கொண்டுவரப்போவதாக மோடி மற்றும் பா.ஜ.க.வினர் கூறுவது குறித்து தங்கள் கருத்து என்ன?
-_ பா.வெற்றிச்செல்வி, வியாசர்பாடி

பதில் : காந்தியை அவர்கள் பாராட்டுவதும், அம்பேத்கரைப் புகழ்வதும், காமராஜரை தமிழ்நாட்டில் வரிப்பதும் எல்லாம் அவர்களது தந்திர வியூகங்கள் ஏமாறக் கூடாது!

கேள்வி : கல்விக்கடன்கள் முடக்கப்படுவது ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்ந்தெழக் கூடாது என்ற மறைமுகத் திட்டத்தின் செயல்பாடா?
_ மா.காளியப்பன், உத்திரமேரூர்

பதில் : இருக்கலாம் _ இக்கருத்து சரியானதே!

கேள்வி : கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது போல், குடியால் குடிகளைக் கெடுத்து இலவசம் பெறுவது சரியா? –  வே.மாரியம்மாள், காஞ்சிபுரம்

பதில் : புரிய வேண்டிய இந்த உண்மை வாக்குப்போட ரூபாய் பெற்று ஏமாறும் வாக்காளர்களுக்கு நம் நாட்டில் புரியவில்லையே! என்ன செய்து தொலைப்பது?

கேள்வி : தொட்டில் குழந்தைத் திட்டம் போல், ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயல்வோருக்கு காப்பகங்களை அரசே ஏன் நடத்தக் கூடாது? – தி.கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீரங்கம்.

பதில் : துணிவும், கொள்கைத் தெளிவும், சமதர்மமும் நிறைந்த ஒரு ஆட்சி வந்தால் அது, தானே நடக்கும்.

கேள்வி : ஜாதி மறுப்பு மணம் புரிந்தோர் பிள்ளைகளுக்கு தனி இடஒதுக்கீடு தரவேண்டியது கட்டாயமல்லவா? _ பா.திருமூலதாசன், நாமக்கல்

பதில் : ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர் கழகம் 9சி னிஷீணீ _ கலப்பு (ஜாதி மறுப்பு) திருமணங்களில் பிறந்த பிள்ளைகளுக்கும் _ வாழ்விணையருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இனி இடஒதுக்கீடு தரப்படல் வேண்டும் என்பதைத் துல்லியமாக விளக்கி தீர்மானம் போட்டுள்ளோம் _  வற்புறுத்தி வருகிறோம். விரைவில் இது பிரச்சாரம் _ போராட்ட வடிவம் எடுக்கும்!

கேள்வி : திராவிட ஆட்சியால் தமிழகம் தாழ்ந்தது, கெட்டது என்ற கருத்துப் பரப்புக்கு எதிராய் திராவிட ஆட்சிகளால் பெற்ற பயன்களைப் பட்டியலிட்டு ஒரு நூல் தாங்கள் வெளியிட்டால் என்ன? – க.அர்ஜுனன், சத்தியமங்கலம்

பதில் : விரைவில் வெளிவரும். ஆய்வாளர் திருநாவுக் கரசின் உரை, கட்டுரை விடுதலையில் வெளிவந்துள்ளது. தங்கள் கருத்து மிகச் சரியானது.

கேள்வி : தமிழ்த்தேசியம் பேசுவோர் பார்ப்பனர்களை தமிழராக ஏற்பது வரலாற்றுப் பிழையல்லவா? – சீ.முத்துப்பாண்டியன், திருநெல்வேலி

பதில் : அதிலென்ன சந்தேகம். திராவிடர் இயக்கம் மூட்டிய தீயில் குளிர்காயும் நுனிப்புல் பேர்வழிகளுக்கு அது புரியாது!  பார்ப்பனர் தமிழரல்லர் என்று மறைமலை அடிகளார் எழுதியுள்ளதை படித்து அறிந்துகொள்ளட்டும்.

கேள்வி : அத்வானியின் எதிர்ப்பு சுஷ்மா பிரச்சினையில் வரவில்லையே ஏன்?
_ கு.அஜீத்குமார், மதுரை

பதில் : இருவரும் ஒரே அணியினர். எனவே, இது அதிசயம் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *