இடதுசாரி சனநாயக முன்னணி வேண்டும்
வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதுடன், அந்த சக்திகளின் பிற்போக்கான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதுதான் நமக்குமுன் உள்ள மிகப் பெரிய சவாலாகும். இந்தப் பிரச்சினைகளை முன்வைத்து இடதுசாரிகள் நடத்தும் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளன. வகுப்புவாத சக்திகளை முறியடிக்க ஓர் இடதுசாரி சனநாயக முன்னணியை உருவாக்க வேண்டும். – என்.சங்கரய்யா
ஏன் இந்த மவுனம்?
இலஞ்சம் வாங்கவும் மாட்டேன்; வாங்க அனுமதிக்கவும் மாட்டேன் என்ற பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் நடைபெற்றால் அதைப் பற்றி பேசவும் மாட்டேன் என்று கூறவில்லையே! பின் ஏன் இந்த விவகாரங்களில் மவுனம் காத்து வருகிறார். – இராகுல் காந்தி
இப்தார் விருந்தில் மோடி பங்கேற்காதது ஏன்?
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த இப்தார் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்காதது ஏன்? தனது மத நம்பிக்கைகள் சார்ந்த விஷயங்கள்தானே இப்தார் விருந்தில் பங்கேற்க விடாமல் மோடியைத் தடுத்தது? இதை அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கலாமே. – ஒமர் அப்துல்லா
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை விமர்சிப்பதா?
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் உலகம் எதிர்நோக்கியிருந்த மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு அமைதியான வழியில் தீர்வு காணப்பட்டுள்ளது. ஒப்பந்தம் ஏற்படாமலிருந்தால், மேற்காசிய நாடுகளிலும் பிற நாடுகளிலும் போர் அபாயம் மேலும் அதிகரித்திருக்கும்.
– ஒபாமா
வெள்ளையறிக்கை வேண்டும்
2014-_ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 5,650 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழகத்தில் 68 விவசாயிகள், 827 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் இதற்கு தீர்வு காண வேண்டும். வெள்ளையறிக்கை வேண்டும்.
– இரா.முத்தரசன், மார்க்சிய கம்யூனிஸ்ட்
பயனுள்ள நூல்களைப் படிப்பது கட்டாயம்
நல்ல புத்தகங்கள் கற்பனைத் திறனை வளர்க்கும். இதனால் படைப்பாற்றல் வளரும். படைப்பாற்றலால் சிந்திக்கும் திறன் பெருகும். சிந்திக்கும் திறன் அறிவுவளர்க்கும். அறிவு மனிதனை மாமனிதராக்கும். அதுதான் புத்தகம்.
– ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு
கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் மக்களுக்கு ஜாதிப் பிரிவின் அடிப்படையில் உரிய உரிமைகள், ஒதுக்கீடுகள் முழுமையாகச் சென்றடையவில்லை என்பதையே காட்டுகின்றன. ஜாதிவாரி கணக்கெடுப்பு அனைத்துப் பிரிவினர்க்கும் அவர்களின் பிரிவிற்கேற்ப கல்வியில் வேலைவாய்ப்பில் பிற சலுகைகளில் உரிய வாய்ப்பைப் பெற உதவும். அதனால், பா.ஜ.க. அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உடன் வெளியிட்டு இடஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும். – ஜி.கே.வாசன்
எதிர்ப்பு முறையாக இருக்க வேண்டும்
எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பையும், அதிருப்தியையும், சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை சனநாயக மாண்புடன் இருக்க வேண்டும்.
– மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்