ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சி சொல்ல முன்வந்துள்ள இரவி சுப்பிரமணியன் தற்போது சங்கராச்சாரி ஜெயேந்திரர் செய்த ஒரு மோசடியை வெளியிட்டுள்ளார்.
பெங்களூருவில் ஜெயெந்திரருக்குச் சொந்தமான கல்வி நிறுவனம் உள்ளது. அதற்கு ஆவணங்களின்படி இரவி சுப்பிரமணியம் தான் நிர்வாகி _ அப்படியிருக்க அங்கு நியமனங்கள் நான்தான் செய்ய வேண்டும். ஆனால், ஜெயேந்திரர் என்னுடைய கையொப்பத்தை போலியாகப் போட்டு, ஒரு பெண்மணியை நியமனம் செய்துள்ளார். அந்தப் பெண்தான் ஜெயேந்திரர், சங்கரராமன் கொலை வழக்கில் விடுதலை பெற உதவியவர். இப்படி சட்டவிரோத செயல்புரியும் ஜெயேந்திரர் முகத்திரையைக் கிழிப்பேன் என்கிறார் இரவி சுப்ரமணியன்.