தேங்காய் எண்ணையில் அதிகக் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) உள்ளது என்ற வாதம், வதந்தியாகும். சூரியகாந்தி எண்ணையை பரவலாக விற்பனைக்குக் கொண்டுவர வணிக நிறுவனங்கள் செய்த பிரச்சாரம் அது.
தென்கிழக்கு ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள், மேற்கிந்திய தீவுகள் ஆகியவற்றில் முழுவதும் தேங்காய் எண்ணையே பயன்பாடு. கேரளாவில் அதுவே முதன்மை. ஆனால், இரத்தக் குழாயில் கொழுப்பு அடைக்கும் என்று ஒரு செய்தியைப் பரப்பி தேங்காய் எண்ணையின் பயன்பாட்டைக் குறைத்தனர்.
தேங்காய் எண்ணையில் உள்ள கொழுப்பு இரத்த நாளங்களுக்கு நன்மையே செய்கிறது. தாவர கொழுப்புகளில் கொலஸ்ட்ரால் நேரடியாக இல்லை.
தேங்காய் எண்ணையில் உள்ள கொழுப்பு இரத்த நாளங்களின் உட்புறம் நலமாக இருக்கவே பயன்படுகிறது என்கிறார் மருத்துவர் கு. சிவராமன். மேலும் சில நுண்கிருமிகளைக் கொல்லும் இயல்பு தேங்காய் எண்ணைக்கு உண்டு. குறைமாதத்தில் பிறந்த குழந்தை தேற தேங்காய் எண்ணை பயன்படுகிறது.
6 மாத குழந்தைக்கு கஞ்சியில் தேங்காய் எண்ணை சில துளிகள் கலந்து கொடுக்க எடை கூடும். நோய் எதிர்ப்பாற்றல் பெருகும்.
Leave a Reply