பெண்ணும் எண்ணும்

ஆகஸ்ட் 01-15

உலக அளவில் கொல்லப்படும் பெண்களில் கணவர், காதலர் போன்ற வாழ்க்கைத்  துணைவர்களால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை 38%. இந்தியாவில் குடும்ப வன்முறை காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் சதவீதம் 7.5.

உலக அளவில் இளம் வயதிலேயே பாலியல் வன்முறைகளைச் சந்திக்கும் பெண்களின் சதவீதம் 20. 10% ஆண்களும் இளம் வயதில் இந்தக் கொடூரத்தை எதிர்கொள்கிறார்கள்.

இந்தியாவில் மனைவியை அடிப்பது சரிதான் என்று கருதும் இளைஞர்களின் சதவீதம் 57. 53% இளம் பெண்களும் இது சரி என்று கருதுவதுதான் விநோதம்.

2012_இல் எடுக்கப்பட்ட கணக்கீட்டில், இந்தியாவில் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 8,233.

1997_இல் இந்த எண்ணிக்கை 6,995 ஆக இருந்தது.

இந்தியாவில் 2003 முதல் 2013 வரையிலான 10 ஆண்டுகளில் அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் 134 சதவீதம். (2003_இல் 50,703ஆக இருந்த எண்ணிக்கை 2013_இல் 1,18,866 ஆனது).

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கர்வக் கொலைகளின் எண்ணிக்கை 1,000. பாகிஸ்தானிலும் இதே அளவில் கர்வக் கொலைகள் நடக்கின்றன.

– நன்றி: தி இந்து 19.5.2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *