காசோலை ஒரு முக்கிய சட்ட ஆவணமாகக் கருதப்படுகிறது. காசோலையில் குறிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத காலம்வரை அது செல்லுபடியாகும். காசோலைகள் செல்லாமல் போவது இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகவும் பிரபலமான ஒரு குற்றம் என்று அறியப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் 40 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளன. காசோலையில் குறிப்பிட்ட தொகை, காசோலைக் கொடுத்தவருடைய வங்கிக்கணக்கில் இல்லாமல் போனால், அந்த காசோலை bounce ஆகிறது.
ஒரு காசோலை பல காரணங்களால் செல்லாமலாகி விடும். போதுமான தொகை கணக்கில் இல்லாமல் போவது, கையொப்பங்களின் வேறுபாடு, உயிரிழந்த (State), காசோலைகள், பிற்கால தேதி இட்ட காசோலைகள் (post dated cheques),காசோலைகளில், பொறுப்பு ஏற்காமல், செய்யப்படும் திருத்தங்கள் _ என்ற காரணங்களால் காசோலைகள் செல்லாததாகி விடுகின்றன. ஒரு காசோலை bounce ஆகும்போது, அதைக் கொடுத்தவரிடமிருந்து (defaulter) வங்கி அபராதம் வசூலிக்கிறது.
இந்தியாவில் காசோலை வங்கியில் பணமின்றி திரும்பும்போது, இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, Negotiable Instruments Act, 1881 படி, செல்லாத காசோலை வழங்கியவருக்கு கடுமையான அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகின்றன.
செல்லாத காசோலை வழங்கப்பட்டால், அதற்குரிய சட்ட நிவாரணம் என்ன?
அனைத்து வங்கிகளும், செல்லுபடியாகாத காசோலையுடன் சேர்த்து, ஒரு ‘Cheque
Return Memo’வும், காசோலை Dishonour ஆனதற்கான விளக்கமும் அளிக்கின்றன. உங்களிடம் காசோலை இருந்தால், உடனடியாக காசோலை வழங்கியவருக்கு தகவல்தெரிவியுங்கள். அந்தக் காசோலையை மூன்று மாதத்திற்குள் மீண்டும் வங்கியில் கொடுக்கலாமா என்று அவரிடம் கேளுங்கள். காசோலை இரண்டாம் முறையும் bounce ஆனால், நீங்கள் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்கலாம். முதல் நடவடிக்கையாக, CR memo கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் நீங்கள் காசோலை தந்தவருக்கு சட்ட தகவல் (legal notice) அனுப்பலாம். அந்த தகவல் அறிக்கையில் சகல தகவல்களையும் குறிப்பிட வேண்டும். முதல் தடவை காசோலை Bounce ஆன செய்தியையும் குறிப்பிட வேண்டும். இந்த Notice கிடைத்த தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் காசோலைக்காரர் அந்தக் தொகையைக்கட்டி வைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் தொகையை வங்கியில் கட்டவில்லை என்றால், நீங்கள் Magistrate Court இல் புகார் மனுதாக்கல் செய்யலாம். 15 நாள் கெடு முடிந்து அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் இந்த வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இது செய்யப்படாவிட்டால், இந்த வழக்கு காலம் கடந்த வழக்காகக் கருதப்பட்டு, நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படும் வாய்ப்பை இழந்துவிடும். உங்கள் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, ஏமாற்றியவருக்கு 2 வருட சிறைத்தண்டனை கிடைக்கும். மேலும், காசோலைத் தொகையைப் போல இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும். காசோலைக்காரர், தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள், இந்த ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
வாடகை காசோலை bounce ஆனால்:-_
பொதுவாக வீட்டு உடமையாளர்கள், வாடகைக்காரர்களிடமிருந்து, (post & dated cheques) பின் தேதியிட்ட காசோலைகள் பெறுவது வழக்கம். வாடகைக் காசோலை, வங்கியிடமிருந்து திரும்ப வந்தால், வீட்டுக்காரர், மேலே, பதிவு செய்யப்பட்ட வழிமுறைகளை மேற்கொள்ளலாம். சில சமயங்களில், வாடகைக்காரரிடம் போதுமான தொகை இல்லாமல் இருக்கும். வீட்டுக்காரர் சரியான நேரத்தில் காசோலையை வங்கியில் தாக்கல் செய்யாமல் இருந்திருக்கலாம். எனவே, வீட்டுக்காரர் வாடகைக்காரரிடம் முதலில் சட்ட நடவடிக்கைகளைப் பற்றித் தகவல் தெரிவிக்கலாம். அதன் பிறகு நீதியின் படிகளில் ஏறலாம். சில சமயங்களில், வீட்டுக்காரரால் ஏற்பட்ட செலவுகளுக்காக, வாடகைக்காரர் வாடகையிலிருந்து ஒரு தொகையை செலவு செய்திருக்கலாம். அந்நிலையில் காசோலை bounce ஆகலாம். வழக்கு தொடரலாம். வாடகைக்காரர் உண்மையை நிரூபிக்க வேண்டும்.
EMI தவணைத் தொகை bounce ஆனால்:_
ஒரு கடனுக்காகக் கொடுக்கப்பட்ட EMI காசோலைகள் bounce ஆனால், வங்கியும், காசோலைக் கொடுத்தவர் மேல் வழக்குத் தொடரலாம். ஆனால், வங்கிகள் இந்த முயற்சியில் பொதுவாக இறங்குவதில்லை. முதலில், அதிக அபராதம் Loan Default Charges, Cheque Bounce Charges – இவை வசூலிக்கப்படுகின்றன. இந்த கட்டணங்கள் ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இது EMI தொகையுடன் சேர்க்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும், காசோலை கொடுத்தவரின் credit rating பாதிக்கப்படுகின்றது. Secured Loans,- யைப் பொறுத்தவரையில், வங்கிகளுக்கு, Security–க்காக கொடுக்கப்பட்ட ஆவணங்கள், Collateral Security-யாக பணத்திற்குப் பாதுகாப்பளிக்கிறது. பலமுறை ஞாபக மூட்டிய பிறகும், கடன் வாங்கியவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்காவிட்டால், வங்கி போதுமான எச்சரிக்கைத் தகவல் அனுப்பியபின், அந்த security property–யை ஏலத்தில் கொண்டுவந்து, அவர் பெற்றுக்கொண்ட கடன் தொகையை மீட்டுக் கொள்ளலாம்.
ஒரு வர்த்தக உடன்படிக்கையில் காசோலை bounce ஆனால்:_
வியாபாரத்துறையினரிடமிருந்து, நீங்கள் ஒரு காசோலை பெற்றால், அது bounce ஆகும் நிலையில், அவரிடமிருந்து பாக்கியைப் பெறுவதற்கு, நீங்கள் மேற்கூறிய முறையை மேற்கொள்ள வேண்டும். வர்த்தகத் துறை உடன்படிக்கைகளில், (bounced cheques) செல்லாக் காசோலைகள் இருக்கும் பட்சத்தில், வர்த்தக சமூகத்தில் பெயர் கெட்டுப்போகும் நிலை உருவாகலாம். இதனால், சமூக அந்தஸ்து பெருமளவில் பாதிக்கப்படும். இது பொருளாதார இழப்பீட்டை விட பன்மடங்கு மோசமானது.
நீதிமன்றங்களில் செல்லாக் காசோலைகள் தொடர்பான வழக்குகள் இலட்சக்கணக்கில் நிலுவையில் இருப்பதால், மத்திய அரசு Negotiable Instruments Act- இல் பல திருத்தங்களைக் கொண்டுவர உத்தேசித்துள்ளது. இதன் மூலம், நீதிமன்றத்தில் வழக்குகளின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என்று நம்பப்படுகிறது. ஊடகங்களிலிருந்து கசியும் தகவல்கள்படி, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காத defaulter எதிர்காலத்தில் சிறைத் தண்டனை பெறமாட்டார். சகல வழக்குகளுக்கும் Lok Adalath மூலமாகத் தீர்வு காணப்படும். இந்தத் திட்டம், சாமானிய மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இதுபோன்ற காசோலைக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. மிகவும் தீவிரமான தண்டனை கொடுத்தால், இத்தகைய குற்றங்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.