சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மே 9 அன்று சென்ற பிரதமர் மோடியை அம்மாநிலத்திலுள்ள பஸ்தார் மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியா வரவேற்றுள்ளார். அப்போது அவர், பந்காலா என்ற அலுவலக அதிகாப்பூர்வ அணியாமலும் கூலிங் கிளாஸ் அணிந்தும் கை கொடுத்து (கொலுத்தும் வெயிலில் அணியத்தக்க உடை அல்ல அது) பிரதமரை வரவேற்றதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு நோட்டீசு அனுப்பியுள்ளது.
அதில், பஸ்தார் மாவட்ட ஆட்சியராக நீங்கள் பிரதமரை ஜக்தால்பூரில் வரவேற்றீர்கள். நீங்கள் அப்போது முறையான உடைகளை அணியவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டதுடன் கூலிங் கிளாஸ் அணிந்தும் வரவேற்றுள்ளீர்கள். இனி இத்தகைய தவறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டாம் என மாநில அரசு உங்களை எச்சரிக்கிறது.
நீங்கள் செய்தது அரசு ஊழியருக்குரிய நடத்தை விதிகளுக்குப் புறம்பாக அமைந்துள்ளது. அரசு ஊழியர்கள், குறிப்பாக சேவைத் துறையில் பணியாற்றுபவர்கள் நேர்மையையும், கடமை உணர்வையும் பராமரிப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
மோடி மட்டும் கோமாளி கூத்து போல விதவிதமான ஆடைகள் அணிவதும், ஆடை முழுவதும் தன்னுடைய பெயரை பதித்து 10 இலட்ச ரூபாய்க்கு வெளிநாட்டு ஆடை அணிவதும் நடக்கலாம். அய்.ஏ.எஸ். அதிகாரி வெயிலுக்கு கூலிங்கிளாஸ் அணியக் கூடாது. நல்லா இருக்கு உங்க நடத்தை விதிமுறைகள்!