Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கழகப் பொருளாளருக்கு பெரியார் விருது

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், சமூக நீதியின் மேம்பாட்டிற்கும் அரும் பணியாற்றி வரும் பெருமக்களுக்கு, சான்றோர்களின் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

2010ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை அவர்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விருதினை அறிவித்த அடுத்த நாளே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுடன் சென்று கோ.சாமிதுரை அவர்கள் முதல் அமைச்சர் கலைஞரைச் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

திருவள்ளுவர் நாளான ஜனவரி 16ஆம் தேதி நிதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ள விழாவில் முதல் அமைச்சர் கலைஞர் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார்.