பெரியாரை அறிவோமா?

ஜூன் 01-15

1.    வாழ்க்கை செம்மையாகவும் தூய்மையா கவும் இருக்கும் என்று நம்பி காசி சென்ற பெரியார் அங்கு கண்ட காட்சி யாது?

அ) காசி புனிதத் தலமாக இருந்தது. ஆ) அவர் நினைத்தபடியே செம்மையாகவும் தூய்மையாகவும் இருந்தது. இ) ஒழுக்கமும், நேர்மையும், நாணயமும் நிறைந்து இருந்தது. ஈ) ஒழுக்க ஈனமும் விபச்சாரமும் மலிந்து கிடந்தமை

2.    ஆணுக்குப் பெண் அடிமையில்லை என்று சொன்ன பெரியார் தமது குடும்பத்தில் 1909 ஆம் ஆண்டிலேயே யாருக்கு விதவைத் திருமணம் நடத்தி வைத்தார்?

அ) சகோதரிக்கு ஆ) தங்கையின்  மகளுக்கு இ) மகளுக்கு ஈ) அண்ணனின் மகளுக்கு

3.    தந்தை பெரியார் போராட்டத்தில் இறங்கிய பின்னர்தான் எழுச்சி அதிகமாயிற்று என்றும், புத்துயிர் பெற்றது என்றும் வைக்கம் போராட்டம் பற்றி எழுதிய சிறப்பு அறிக்கையில் குறிப்பிட்ட ஆங்கிலேய அலுவலர் யார்?

அ) மிஸ்டர் பிட் ஆ) காட்டன் அய்.சி.எஸ் இ) மிஸ்டர் நார்டன் ஈ) மிஸ்டர் வுட்

4.    கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற பெண்மணிகள்

அ) கஸ்தூரிபாய் – வள்ளியம்மை ஆ) சாரதா தேவி – நிவேதிதா இ) அன்னிபெசன்ட் – அம்மையார் – விஜயலெட்சுமி பண்டிட், ஈ) கண்ணம்மாள் – நாகம்மையார்

5.    வைக்கம் போராட்டத்தில் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்ற பெரியார் எந்தச் சிறையில் அடைக்கப்பட்டார்?
அ) அருவிக்குத்தி ஆ) திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயில் இ) பெல்லாரி சிறை ஈ) அந்தமான் சிறை

6.    தாழ்த்தப்பட்டோர் சுசீந்திரம் கோயிலில் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என குடிஅரசு தலையங்கம் எழுதிய ஆண்டு எது?

அ) 1934 ஆ) 1928 இ) 1926 ஈ) 1927

7.    நீங்கள் சாமியைக் கல் என்று சொன்னீர்களே இது சரியா? என்று கேட்ட காப்பிக்கடை நாராயண அய்யங்காரிடம் ஆம் வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள் காட்டுகிறேன் என்று பெரியார் 1928இல் சவால் விட்டுப் புறப்பட்டது எந்த ஊரில் நடைபெற்றது?

அ) சீரங்கம் ஆ) மதுரை இ) நாங்குநேரி ஈ) சிதம்பரம்

8.    முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்ற ஆண்டு எது?

அ) 1925 ஆ) 1928  இ) 1930 ஈ) 1934

9.    முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்ற ஊர் எது?

அ) அருப்புக் கோட்டை ஆ) ஈரோடு இ) சுக்கிலநத்தம் ஈ) திருத்தங்கல்

10.    உண்மையான இன்பம் என்பதாக பெரியார் எதைச் சொல்கிறார்?

அ) பிறர்க்குத் தொண்டு செய்வதால் ஏற்படும் இன்பம் ஆ) ஒருவனும் ஒருத்தியும் இல்லறம் நடத்தும் இன்பம் இ)உயர்ந்த இலக்கியங்களில் இருந்து பெறும் இன்பம் ஈ) தெளிந்த கொள்கையாளர்களின் கூட்டுறவு தரும் இன்பம்.

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *