கருத்து

மே 16-31

கருத்து

சமுதாயத்தில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் நம்முடைய நாட்டில் இன்னமும் ஜாதி அமைப்பு முறையில் எந்த மாற்றமும் நடைபெறாமல் உள்ளது. மனிதர்களை ஜாதியின் பெயரால் ஒடுக்கும் ஜாதிய அமைப்பு முறையிலிருந்து மாற ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.

– டேவிட் ஜவஹர், பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம்.

கூட்டாட்சி நடைமுறையில் மாநில முதல்வர்கள் பிரதமருடன் 100 முறை பேசலாம்; பிரதமர் முதல்வர் களுடன் பேசலாம். ஆனால், தற்போது அனைத்து விஷயங் களுமே மத்திய அமைச்சரவைச் செயலர் மூலமாக மாநில தலைமைச் செயலர்களுடன் பேசப்படுகின்றன. இது, கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கை இல்லையா?

– மம்தா பானர்ஜி, முதல் அமைச்சர், மேற்கு வங்கம்.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதோ அவற்றைக் காட்டி மிரட்டுவதோ மனித குலத்துக்கு எதிரான மாபெரும் பாவம். அணு ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் அவற்றை அழிக்க வேண்டும்.

– ஜாவித் ஜாரீப், ஈரான் வெளியுறவு அமைச்சர்.

மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்க நினைக்கும் சக்திகள் மிகவும் வலுவுடன் செயல்பட்டு வருகின்றன. விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்க்க மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியுள்ளது. அமைதியை நிலைநாட்ட மிகவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மக்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

– அசாம் கான், உ.பி. மாநில அமைச்சர்

புதிய பொருளாதாரத்தின் அடிப்படை உந்துதலே நில அபகரிப்பு. தகவல் தொழில் நுட்பத் துறையாயினும் நிலக்கரித் துறையாயினும் முதலில் நிலத்தையும் நீராதாரத்தையும் அபகரிப்பதே குறிக்கோள். இவர்களை அனுமதித்தால் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பது பொய். வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியையே நாம் கண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

– அருந்ததி ராய், எழுத்தாளர்.

ராஜபக்சேவுக்கு எதிராகப் பேசும் மைத்ரி, தமிழ் மக்களைக் கொலைசெய்த குற்றத்துக்காக ராஜபக்சே மீது கை வைக்க மாட்டார். அந்த இனப் படுகொலைப் போரையே இன்னும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றுதான் மைத்ரி சொல்கிறார்.

– இலங்கை வாழ் எழுத்தாளர் தீபச்செல்வன்


துளிச் செய்திகள்

  • முன்னாள் சோவியத் யூனியன் நாடான கஜகஸ்தானில் ஏப்ரல் 26 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் 5ஆவது முறையாக நாசர்பயேவ் வெற்றி பெற்றுள்ளார்.
  • இலங்கையில் ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற வகையில் சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் ஏப்ரல் 28 அன்று நிறைவேறியது.
  • நெல்லை மகேந்திரகிரியில் ஜிஎஸ்எல்வி மார்க்3 கிரையோஜெனிக் என்ஜின் சோதனை ஏப்ரல் 28 அன்று வெற்றி பெற்றது.
  • கழிவுகளை அகற்றும் பணிக்கு மனிதர்களை ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தேசிய துப்புரவாளர் கமிஷன் எச்சரித்துள்ளது.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *