கருத்து
மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் நிலம் கையகப்-படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. தொழிலதிபர்-களுக்குச் சாதகமானது. மக்கள் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
– நிதிஷ்குமார், பிகார் முதல் அமைச்சர்
நியூயார்க், மிசேரியில் கருப்பின இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்க காவல்துறையினரின் மனநிலை, நடைமுறைகளில் மாற்றம் அவசியம்.
– பராக் ஒபாமா, அமெரிக்க அதிபர்
நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணப்படம் வெளியாவதால் நம் நாட்டின் பெருமைக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடாது. ஆவணப் படத்துக்கு, இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். இது நமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
– ஒமர் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாடு கட்சி.
மத்தியில் ஆட்சிபுரியும் கட்சி இந்தியாவை காவிமயமாக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சரஸ்வதி பூஜை, பள்ளிகளில் குரு பூஜை, பசுமாட்டை வழிபட வேண்டும், பகவத் கீதை புனித நூல் என்று கூறி வருகின்றனர்.
அவர்களுக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? இதனைப் புரிந்து கொண்டால் மனித உரிமைகள் என்ன வென்பது தெளிவடையும்.
– சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமையில்லை என தெரிவித்-துள்ளது. ஆனால் வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமைதான் என பல நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வில் மாறுபட்ட தீர்ப்பை நான் வழங்கியுள்ளேன்.
மக்கள் வாக்களிப்பதில் தங்களுக்கு விருப்பமில்லையென்றால் சட்டத்தின் மூலம் அந்த உரிமையை ஆட்சியாளர்கள் திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்பது என்னைப் பொருத்தவரையில் அபத்தமானது. இந்த உரிமை அரசியல் சாசனத்தின் அடிப்படையானது.
– செலமேஸ்வர், நீதிபதி, உச்ச நீதிமன்றம்.
………….
சொல்றாங்க
பாதுகாப்புத் துறைக்காக நிலம் கையகப்படுத்தும்போது அதுகுறித்து நில உரிமையாளர் களிடம் ஒப்புதல் வாங்கக் கூடாது என்று நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சேர்க்க காங்கிரஸ் மறந்துவிட்டது.
– அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர்
சொல்றேங்க: நீங்க மறக்காம முதலாளிகளுக்கு சேவகம் பண்றீங்களே… அதைப் பெருமையா சொல்றீங்களா?
சொல்றாங்க
அய்ந்து கண்டங்களுக்கு பயங்கரவாதிகளை ஈரான் அனுப்பியுள்ளது. உலகில் பயங்கரவாதத்திற்கு ஊக்கமளிக்கும் நாடுகளில் முதன்மையான இடத்தை வகிக்கிறது அந்நாடு.
அணு ஆயுதம் இல்லாத ஈரான் உலகை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்க வைத்துள்ளது. அணு ஆயுதம் இருந்தால் இனி என்ன செய்யும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம்.
-பெஞ்சமின் நெதன் யாஹு, இஸ்ரேல் பிரதமர்.
சொல்றேங்க: உங்க கூட்டணி பயங்கரவாதம்தானே பாஸ், உலக பயங்கரவாதமே! எல்லாருக்கும் ஆயுத சப்ளையும் நீங்கதானே!