சாய்பாபா சவப்பெட்டி, 20 நாள்கள் முன்பே தயாரிக்கப்பட்டது! – செய்தி
மூட நம்பிக்கையை வளர்த்து மக்கள்கிட்டயிருந்து சம்பாதித்த சாய் டிரஸ்ட் சொத்தை, அடுத்து வரும் மடாதிபதி அனுபவிக்க வேணாமா… அதான், அண்ணன் எப்போ சாவான்…. திண்ணை எப்போ காலியாகும் கதையா வேலை நடந்திருக்கு…..!
சபரிமலையில் பக்தர்கள் இறந்தததற்கு மகரவிளக்கு தாமதமாகத் தெரிந்ததே காரணம். – செய்தி
அப்ப, இத்தனை உயிர் இழப்புக்கும் அந்த சபரிமலைக் கோயில் ஊழியர்கள்தான் காரணம்ப்பா…. பின்ன, அவங்க மகரவிளக்கை லேட்டா கொளுத்தியதாலத்தானே, இந்தச் சம்பவம் நடந்தது….!
கர ஆண்டால் ஆண்களுக்கு ஆபத்தா? – செய்தி
ஏன் ஜோசியரே… கர வருசத்தால ஆண்களுக்கு ஆபத்துன்னு பீதியைக் கிளப்பி விட்டுட்டு இருக்கீங்களே…. முதல்ல, உங்களுக்கு வர்ற ஆபத்தைத் திரும்பிப் பாருங்க…