உலகிலேயே அதிக அளவு தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளில் ஈரான் முதலிடத்திலும் ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்திலும் பாகிஸ்தான் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
நைஜீரியாவும் சிரியாவும் நான்காம் அயந்தாம் இடங்களில் உள்ளன என லண்டனைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் சமாதான இன்ஸ்டிடியூட் தொகுத்து வெளியிட்டுள்ளது.
உலக அளவில் பத்தாயிரம் தீவிரவாதத் தாக்குதல்கள் 2013ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ளன. இதில், பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்-களில் உயிரிழப்பு 37 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2000_2013 வரை பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கமானது 778 தாக்குதல்களை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளது.
இதில் 12 விழுக்காடு தற்கொலைப் படைத் தாக்குதல்கள் ஆகும். உலக அளவில் அதிக தீவிரவாதிகளைக் கொண்ட அமைப்பாக தலிபான் திகழ்கிறது என்று பன்னாட்டு ஊடகங்களுக்கு செய்தி வழங்கப்-பட்டுள்ளது. ஆனால் இதை-யெல்லாம் தூண்டுகிற, இதனால் பலன் அனுபவிக்கிற அமெரிக்காவை எந்தக் கணக்கில் சேர்ப்பீர்கள் என்று கேட்கிறார்கள் இச்செய்தியைப் படித்தவர்கள்?
அந்தக் கணக்கையும் கொஞ்சம் சொல்லுங்க பாஸ்.