கருத்து

டிசம்பர் 16-31

கலவரங்கள் மூலம் ஃபெர்குசனில் வெளிப்பட்ட இளைஞர்களின் கோபம் அந்தப் பகுதிக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டின் பிற பகுதிகளிலும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தாங்கள் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என கருப்பின இளைஞர்கள் கருதுகின்றனர். அனைவருக்கும் சமத்துவம் என்பதுதான் அமெரிக்காவின் அடிப்படைக் கோட்பாடு.

இருந்தும், கருப்பின இளைஞர்கள் அவ்வாறு கருதும் நிலை இருந்தால் அது அவர்களது பிரச்சினை மட்டுமல்ல. இந்த தேசத்தின் பிரச்சினையும் ஆகும்.

– ஒபாமா, அமெரிக்க அதிபர்

கருப்புப் பணம் என்றாலே அனைவரது கையும் சுவிட்சர்லாந்தை நோக்கி உயர்த்தப்படுகிறது. ஆனால் கருப்புப் பணம் பல நாடுகளில் பதுக்கப்படுகிறது. இந்தியாவுக்கு உள்ளேயும் பல இடங்களில் கருப்புப் பணப் பதுக்கலும் பரிவர்த்தனைகளும் நடக்கிறது. அவற்றை முதலில் இந்தியா கண்காணிக்க வேண்டும்.

– லினஸ் வான் காஸ்டிலின், சுவிட்சர்லாந்து தூதர்

நாட்டில் பெண்கள் பாதுகாபபு மக முககயமானது. பெண்களைக் கட்டுப்-படுத்தியோ, அல்லது அவர்களின் சுதநதரததைப் பாதிககும வகையலோ நடநது கொள்வதன் மூலம தான அவரகளன பாதுகாபபை உறுத செயய வேணடும என நனைககக் கூடாது. பாலயல வன்செயலகளுககு உரய தணடனை பெறறுத் தருவது குறததுத் தான சநதகக வேணடும.

– தத்து, உச்ச நீதிமன்ற தலைமை நதபத

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியாது. மனிதன் அந்தக் கிரகத்தில் வாழ்வதற்கு ஏற்றவாறு மாற்ற 300 ஆண்டுகள் ஆகும். சுனாமி ஏற்படும் சமயங்களிலும் செயற்கைக் கோள்களை விண்ணிற்கு அனுப்பும் போதும், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் குறையும். இது நமக்குத் தெரியாது. எப்படி என்றால் ஆயிரம் ஆண்டுகளில் ஒரு நொடி கழிவது போல் இந்த நிகழ்வு நடக்கிறது.

– வெங்கடேஸ்வரன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அறிவியலாளர் (மங்கள்யான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *