ஊருக்குள் வந்து உறக்கத்தைக் கெடுக்கும் புலியைப் பிடிக்க திறந்த கூண்டொன்று தயாரானது! கவிச்சி இறைச்சி வேண்டுமே, அதற்கு ஆட்டுக்குட்டி ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டது. காருண்ய சீலர்களின் கவனமும் கவலையும் அதன்பக்கம் திரும்பியது. உயிர்வதை இது, ஒருகணமும் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
மாற்றுத் தீனி ஒன்று வேண்டுமே, இரத்த வாடையும் இருக்க வேண்டுமே, நம் வீட்டுக் குப்பையைக் கிளறிவிடும் கோழி அகப்பட்டது. தோலுரித்துத் தொங்கவிட்டால் புலிக்கு மூக்கு வேர்க்காமலா போகும்?
அது நடந்தது, அருகிலுள்ள காட்டில்!
காட்டிற்குச் சளைத்ததா நம் நாடு?
காத்துக்கு கருப்புக்கு கடாவெட்டி பொங்கித் தின்பதெல்லாம் உயிர்வதை என்று உளறக் கூடாது, பெற்ற மகளையே நரபலி கொடுக்கத் துணிந்தானே ஒரு தகப்பன் துறையூரில்… அதுவல்லவோ உயிர் வதை!
சிரிப்பாய் சிரிக்கும் ஜீவகாருண்யம்!
– சிவகாசி மணியம்