பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரில் வசிப்பவர் ராஜ்குமார். இவர் செருப்புத் தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறார். சந்தோஷ் அங்குள்ள ருத்ரேஸ்வரா கோவில் பூசாரியால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து, தனது நண்பர்களுடன் கோவிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்றபோது கோவிலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த-தாகவும், அதனை வாங்கச் சென்றபோது, பூசாரி இவர்களைத் தடியால் அடித்த-தாகவும், நண்பர்கள் தப்பியோடிய நிலையில் தான் மட்டும் மாட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார் சந்தோஷ். மேலும், வெயிலில் முழங்கால் போட வைத்து தலையில் அடித்தபோது இரத்தம் வந்தவுடன், இனி கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று கூறி திட்டி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
சந்தோசின் அம்மா, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற-போது, உன்னுடைய மகன் கோவிலில் திருட வந்தான். அதனைப் பூசாரி தடுக்க முற்பட்ட-போது, அவனே தூணில் இடித்துக்கொண்டு மண்டை உடைந்து-விட்டது. அதுபற்றி நாங்கள் புகார் கொடுத்தால் உங்கள் குடும்பத்தையே சிறையில் போட்டு-விடுவார்கள். நாங்கள் புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் என்றால் பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என கோவில் நிர்வாகிகள் சிலர் மிரட்டி-யுள்ளனர். போலீஸார் சிலரும், சந்தோஷின் சிகிச்சைக்காக ரூ. 2 ஆயிரம் வாங்கித் தருகிறோம் எனக் கூறி வெற்றுப் பேப்பரில் கைநாட்டு வாங்கியுள்ளனர்.