கருத்து

நவம்பர் 01-15

பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக, சணல் பொருட்களின் பயன்-பாட்டை அதிகரிக்க வேண்டும். வங்க தேசத்தில் சணல் உற்பத்தி அதிகம் உள்ளது. இந்தியாவில் சணல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.  எனவே, இரண்டு நாடுகளும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், சணல் உற்பத்தியை அதிகரிக்க முடியும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும்.

– அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்

———–

பா.ஜ. தலைவர்கள் தங்களின் பல்வேறு நெட்ஒர்க்குகள் மூலம் எதிர்த் தரப்பினைக் குறிவைத்து, நாகரிக-மற்ற வார்த்தைகளில் விமர்சிக்-கின்றனர். தனிநபர் தாக்குதலும் அதிகரித்துவிட்டது. அவர்களின் இதுபோன்ற நடவடிக்கைக்கு பெண்கள்கூட தப்பவில்லை. இதைப் பார்க்கும்போது அவசரநிலைக் காலம்போல் இருக்கிறது.

– மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்

———–

தமிழகத்தில் நீலகிரியில் நடுவட்டம், கூடலூரில் புல்வெளியில் அரிதாகக் காணப்-படும் பூச்சி உண்ணி தாவரங்கள் கோடையில் ஏற்படும் வனத் தீ காரணமாக அழிந்து வருகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள இவற்றைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– சுந்தரேசன், கூடலூர் தாவர ஆய்வாளர்

———–

பெற்றோர் வாங்கும் மிகக் குறைந்த கடன்களுக்காக குழந்தைகள் கொத்தடிமை-களாக்கப்படுவது இப்போது பரவலாகி வருகிறது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஏராளமான சட்டங்கள் இயற்றப்-பட்டுள்ளன. ஆனால், அவை கடுமையான நடைமுறைப்படுத்தப் படும்போது-மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முழுமை-யாகக் கட்டுப்படுத்த முடியும்.

– டி.முருகேசன், மேனாள் தலைமை நீதிபதி, டில்லி உயர் நீதிமன்றம்

——-

ஆதிதிராவிடப் பெண் பேராசிரியைகள் தங்கள் துறையில் முக்கியப் பொறுப்புகளை ஏற்கவும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் தங்களது தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியாற்றும் இடங்களில் பெண் உரிமைகள் மறுக்கப்படலாம். பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கும் உள்ளாகலாம். அக்கால கட்டத்தில் பெண் உரிமைக்காகப் போராடும் அமைப்புகளை நாடத் தயங்கக் கூடாது. மேலும், இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள அப்பெண் பேராசிரியைகளுக்கு சட்ட விழிப்புணர்வும் அவசியம்.

– ராமாத்தாள், தமிழ்நாடு மகளிர் ஆணைய மேனாள் தலைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *