புதுப்பாக்கள்

அக்டோபர் 16-31

 

தாயின் அன்பு குறித்து
நெஞ்சுருகப் பேசும் நாம்,
என்றாவது ஒரு நாள்
சிந்தித்துப் பார்த்ததுண்டா?

அப்பாக்களுக்கு இருந்த
சுதந்திரம் எல்லாம்,
அம்மாக்களுக்கும் இருந்ததா என்று ….
…………………………………………………
கல்விக் கடவுள் சரஸ்வதிக்கு
அப்படி என்ன கோபம்?
என் கைநாட்டுப் பாட்டன்கள் மீது …
……………………………………
செவ்வாய் தோசத்தால்
திருமணம் ஆகாமலே
செத்துப் போன ஜெயந்தி அக்காவிடம்
யார் சொல்லுவார்?
மங்கள்யானின் வெற்றியை …
…………………………………………………………..
உளிகள் அறியும்.
கருவறையில் இருப்பது
கடவுள் அல்ல
கற்சிலை என்று …
…………………………………………….
களிமண்ணில் கடவுள் வடித்து,
அதைக் காக்க காவலர் நிறுத்தி,
கடைசியில்
கடலில் கரைத்து,
வீதி தோறும்
நாத்திகப் பிரச்சாரம் .
விநாயகர் சதுர்த்தி

– ஓவியச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *