உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தனது சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டும் விவகாரம் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மெட்ரிகுலேசன், மாநில கல்வி வாரியமுறை, ஓ.எஸ்.எல்.சி. ஆங்கிலோ இந்தியன் என்ற நான்கு கல்வி முறைகளை இணைத்து சமச்சீர் கல்வி முறையாக இந்தக் கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிறது.
விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இரும்புத்தாது ஏற்றிக் கொண்டு பாகிஸ்தான் சென்ற பனாமா நாட்டுக் கப்பல் பாதை மாறியதால், குமரி மாவட்டம் கடியப்பட்டினம் கடலில் உள்ள முதலைப் பாறையில் தரை தட்டி உடைந்து மூழ்கியுள்ளது.
லிபியாவில் அரசுக்கும் எதிர்ப்பாளர்களுக்குமிடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அதிபர் கடாபி ஒப்புக் கொண்டுள்ளதாக ஆப்ரிக்க யூனியன் தலைவர்கள் கூறினர். இறுதியில் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. கடும் மோதலில் நேட்டோவும் ஈடுபட்டுள்ளது.
அரசு வேலைக்கு அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்கு ஆட்கள் இல்லாதபோது தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைக் கொண்டு காலிப் பணியிடத்தை நிரப்பலாம் என்று மதுரை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலிக்கு உதவியதாக எழுந்துள்ள புகார் காரணமாக, பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று புதுச்சேரி மாநில கவர்னர் இக்பால்சிங் அறிவித்துள்ளார். ஹசன் அலிக்கு பாஸ்போர்ட் வாங்க உதவியது தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
பிரிந்து வாழ்ந்தாலும் மனைவியைக் காப்பாற்ற வேண்டியது கணவனின் கடமை என்று டில்லி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
ஆள் குறுக்கே வந்தால் தானாக நிற்கும் ரேடார் மற்றும் கேமரா தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய கார் சுவீடன் நாட்டைச் சேர்ந்த வோல்வா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ஏப்ரல் 20 அன்று ரூ.2025 ஆக இருந்தது.இதேபோல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.ஒரு கிலோ வெள்ளி ரூ.65,495 க்கு விற்பனையானது. 2 கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக அந்நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் அறிவித்துள்ளது, கடந்த 40 ஆண்டுகளாக காஸ்ட்ரோ இப்பதவியில் இருந்து வந்தார்.