இளைஞன்
அன்று உலக எய்ட்ஸ் தினம். அரசு சார்பில் மக்களிடம் விழிப்புணர்ச்சியை உண்டாக்க, எய்ட்ஸ் நோயைப்பற்றி விளக்க அந்தச் சிற்றூரில் கூட்டம். நடைபெற்ற விழாவில், அரசு மருத்துவர் மேடையில் பேசத் தொடங்கினார்.
அன்பான பெரியோர்களே! தாய்மார்களே!! நான், எய்ட்ஸ் நோயைப் பற்றி உங்களிடம் பேசப் போகிறேன், இந்த நோய் ஒரு உயிர்க் கொல்லி நோயாகும். இதற்கு மருத்துவ ரீதியில் மருந்தேயில்லை. இந்த நோய் மனித இனத்தின் ஒழுக்கக்கேட்டால் வருகிறது, பின் பரவுகிறது. அதாவது ஒரு ஆண் பல பெண்களுடனும், ஒரு பெண் பல ஆண்களுடனும் உடலுறவு கொள்வதாலும், ஓரினச் சேர்க்கையாலும் வருகிறது. இந்த நோய் முதன் முதலாக தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்டது என்றார்.
மருத்துவரின் பேச்சைக் கேட்ட இளைஞன் ஒருவன் எழுந்தான், டாக்டர் அய்யா நான் குறுக்கிட்டுப் பேசுவதால் என்னை மன்னிக்கணும், நீங்கள் சொல்லும் காரணங்களைப் பார்த்தால் இந்த நோய் முதன் முதலில் இந்தியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும். இந்தக் கொடிய நோய் கடவுள்களாலும், கடவுள் அவதாரங்களாலும் விதைக்கப்பட்டது என்றான்.
மருத்துவர் ஆச்சரியப்பட்டு, இதை நீ எப்படிச் சொல்லுறே என்றார். இளைஞன் சொன்னான், அய்யா, இராமனின் அப்பா தசரதன் 60,000 மனைவிகளுடனும், உத்தமி பத்தினி பாஞ்சாலி 5 ஆண்களுடனும் வாழ்ந்தார்களே, எனவே இராமயாணம், மகாபாரதம் தோன்றும் போதே இந்த நோய் தோன்றிவிட்டது. மேலும், சிவனும் அரியும் ஓரினச் சேர்க்கையால் அய்யப்பன் பிறந்ததாகச் சொல்லுகிறார்களே என்றான்.
இளைஞனின் பகுத்தறிவு கண்டு வியந்த மருத்துவர் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியில் இருந்தார். பின் சுதாரித்துக் கொண்ட மருத்துவர், தம்பி நீ எந்தக் கல்லூரியில் படிக்கிறாய் என்றார். அதற்கு அந்த இளைஞன் பெரியார் கல்லூரி என்றான். மீண்டும் மின் அதிர்ச்சியில் உறைந்தார் மருத்துவர்.
வாடிய முகத்துடன் மேடையை விட்டு இறங்கி நடைபோட்டார் மருத்துவர். அப்பொழுது காற்றில் ஆடியது அவர் அணிந்த அய்யப்ப பக்தர் வேட்டி, ஆடிய வேட்டி டாடா காட்டியது அந்த இளைஞனுக்கு.
மின்சாரம். வெ. முருகேசன்
விருதுநகர்