இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடுகள் இல்லாமல் தடுக்க பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியிருந்தது. பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நாடு முழுவதும் 313 கோடியே 31 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில்ரூ.153 கோடியும், மகாராஷ்டிரத்தில் ரூ.25.67 கோடியும், தமிழகத்தில் ரூ.25.05 கோடியும், உத்தரப்பிரதேசத்தில் ரூ.24.07 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சாராயம் இல்லாத மாநிலம் என்று ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட குஜராத் மாநிலத்தில், ஒரு கோடி லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பாட்டில்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கைப்பற்றினர். தேர்தல் வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 75,306 வழக்குகளுள் தமிழகத்தில் 13,641 வழக்குகளும் உத்தரப்பிரதேசத்தில் 13,565 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைவிட தற்போது ரூ.123 கோடி அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 144ன் போது எத்தனை ஆயிரம் கோடி செலவானது என்பதற்குத்தான் கணக்கில்லை.