மான மிழந்தோம் ஆரியத்தால்
மதி யிழந்தோம் ஆரியத்தால்
உரிமை யிழந்தோம் ஆரியத்தால்
உணர்வை இழந்தோம் ஆரியத்தால்
சாத்திரத்திற்கும் அடிமை யானோம்
கோத்திரத்திற்கும் அடிமை யானோம்
மந்திரத்திற்கும் அடிமை யானோம்
மதத்திற்கும் அடிமை யானோம்
அண்டிப் பிழைத்தது ஆரியக் கூட்டம்
மண்டிக் கிடந்தது மக்கள் கூட்டம்
தன்மானம் இன மானம்
காத்தது எம் திராவிடமே
குலக் கல்வித் திட்டத்தைக்
கொண்டு வந்தது ஆரியமே
ஆரிய நஞ்சின் ஆணவத்தை
அழித் தொழித்தது திராவிடமே
இடுப்புத் துண்டு தோளுக்கு
இடம் மாறியது திராவிடத்தால்
இட ஒதுக்கீடும் இன்றளவும்
இத மானது திராவிடத்தால்
சூத்திரன் என்றுனைச் சொன்னாலே
ஆத்திரம் கொண்டு அடிப்பாயே
சொன்னது சொன்னது யாரது?
எம் தந்தை பெரியாரே!
பெண் குலத்தைக் கோவிலுக்கு
நேர்ந்து விட்டது கொடுமையடா!
பொட்டுக் கட்டும் தேவதாசிமுறை
ஒழிந்தது திராவிடத்தால்
கோவில் நுழைவு திராவிடத்தால்
காலுக்கு செருப்பு திராவிடத்தால்
பெண்ணுக்கு உரிமை திராவிடத்தால்
பெண் கல்வியும் திராவிடத்தால்
ஆணும் பெண்ணும் சமம்
திராவிடத் தாலே திராவிடத்தால்
அச்ச மென்பது இனியில்லை
திராவிடத் தாலே திராவிடத்தால்
அம்மி மிதிக்கல அக்னியில்லை
அடிமைச் சின்னமும் பெண்ணுக்கில்லை
மணி விழா மணவிழா
யாராலே திராவிடத் தாலே
திராவிடத்தால் உயிர் பெற்றோம்!
திராவிடத்தால் எழுந் திட்டோம்!
திராவிடத்தால் வாழ்ந் திடுவோம்!
திராவிடத்தால் வீழ்ச்சி இனியில்லை!
– குடியாத்தம் ந.தேன்மொழி