பெண்கள்
ஜி.20 பொருளாதார நாடுகளில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் பெண்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழமுடியாத நாடுகள் எவை எனக் கணக்கெடுக்கப்பட்டன.இதில் கணக்கெடுக்கப்பட்ட 20 நாடுகளில் இந்தியா 19 ஆவது இடத்தில் உள்ளதாம்.20 ஆவது இடத்தில் சவூதி அரேபியா இருக்கிறது.இது ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் எடுத்த ஆய்வின்அதிர்ச்சித் தகவல்.சுகாதாரம்,வன்முறை மற்றும் அத்துமீறலில் இருந்து விடுதலை,வாழ்வாதாரம்,கடத்தல் அல்லது அடிமைத்தனம் ஆகிய அம்சங்களை அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கருப்புப் பணம்
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப்பணம் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்து ஒரே ஆண்டில் ரூ.3,500 கோடியாக உயர்ந்துள்ளதாம்.புற்றுநோயும் பெண்களும்
இந்தியாவில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு 7 நிமிடத்துக்கு ஒரு பெண்ணும்,மார்பகப் புற்று நோய்க்கு 13 நிமிடத்துக்கு ஒரு பெண்ணும் உயிரிழக்கின்றனர்.