Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மோடியின் குஜராத் மாடல் எது?

மனுஷ்யபுத்திரன் (தனது முகநூல் பக்கத்தில்)

ஒரு புத்தகம் பற்றி குருட்டுத்தனமான மோடி ஆதரவாளர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். குஜராத் கலவரங்கள் பற்றிய சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியைக் குற்றமற்றவர் என்று அறிவித்ததன் மூலமாகத்தான் அவர் பிரதமர் வேட்பாளராக கம்பீரமாக வலம் வருகிறார். ஆனால் இந்தப் பரிசுத்தச் சீட்டு எப்படிப் பெறப்பட்டது என்பதை ஆதாரங்களுடன் இந்தப் புத்தகம் முன் வைக்கிறது.

பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா எழுதிய The Fiction of Fact-Finding: Modi & Godhra, a study of the Gujarat 2002 investigations என்ற இந்தப் புத்தகம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் செய்த குளறுபடிகளுக்காக வர்மா கமிஷனால் கண்டிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிகாரி ஆர்.கே ராகவன் பின்னால் சி.பி.அய் இயக்குனராக வாஜ்பாய் அரசாங்கத்தினால் மறு வாழ்வு அளிக்கப்பட்டார். அவர்தான் மோடிமீதான இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். கலவரம் நடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நிலவரம் பற்றி தொடந்து காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த மோடி குல்பர்க் சொசைட்டி படுகொலை பற்றி தனக்கு 5 மணிநேரம் கழித்தே தெரியும் என்று புளுகினார். அதைச் சிறப்புப் புலனாய்வுக் குழு அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்த வன்முறையில், மோடியின் பொறுப்பு பற்றி இந்தப் புத்தகம் மிகத் தெளிவாக முன் வைக்கிறது. ராகவன் போன்ற அதிகாரிகள் மோடிக்கு வழங்கிய இந்தப் பரிசுத்தச் சான்றிதழின் மூலம் எப்படி நமது நீதி அமைப்பின் மீதான நம்பிக்கைகளைத் தகர்த்து எறிந்தார்கள் என்பதைப் பற்றி மனோஜ் மிட்டா ஆழமாக விவரிக்கிறார். மோடியின் குஜராத் மாடல் வளர்ச்சியைப் பற்றியே ஒப்பாரி வைப்பவர்கள் அவரது குஜராத் மாடல் நீதியைப் பற்றி ஒரு கணம் கண் திறந்து பார்க்க வேண்டும்.

இந்தப் புத்தகம் பற்றி அவுட் லுக் இதழ் வெளியிட்ட அறிமுகம் ஃப்ர்ஸ்போஸ்ட்.

இணைய தளம் வெளியிட்ட மனோஜ் மிட்டாவின் பேட்டி ஆகியவற்றின் இணைப்பைக் கீழே தந்திருக்கிறேன்.

http://www.outlookindia.com/article.aspx?289455
http://www.firstpost.com/politics/sit-chiefs-history-made-him-unfit-to-lead-probe-new-book-on-
2002-riots-1458785.html