நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச்சாவுகள் நடைபெற்று வருகின்றன என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. இது ஒரு புறம். ஒவ்வொரு நாளும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பலகோடி ரூபாய் பணம் உண்டியலில் கொட்டப்படுகிறது. இதில், கருப்புப்பணம், கணக்கில் வராத பணம், வரி ஏய்ப்பு செய்த பணம், கொள்ளை அடித்த திருட்டுப் பணம் ஆகியவையே அதிகம்.
இது இன்னொரு புறம்.. ஊழல் பற்றி உண்ணாவிரதங்கள் இருக்கும் ஹசாரேக்களும், இவர்களைத் தூக்கிப் பிடிக்கும் ஊடகங்களும் இந்தக் கொடுமையைப் பற்றி என்றாவது கவலைப்பட்டது உண்டா?