திராவிடத்தால் வாழ்ந்து, திராவிடத்தால் கல்வி கற்று, இப்போது முழுப் பலனையும் அனுபவித்துக் கொண்டு, திராவிடக் கட்சியால் சீரழிந்தோம், திராவிட மாயையை அகற்ற வேண்டும் என ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போல் உளறிக்கொண்டு இருக்கும் அரைவேக்காடுகளுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.
1911_வாக்கில் நடந்த வர்ணாசிரம (குலக்கல்வி) பள்ளிப் பாடம்:
1. இவன் தச்சன்_மரவேலை செய்கிறான்
2. இவன் குயவன்_மண்பாண்டம் செய்கிறான்
3. இவன் கொல்லன்_இரும்புவேலை செய்கிறான்
4. இவன் அம்பட்டன்_முகச்சவரம் செய்கிறான்
5. இவன் வண்ணான்_துணி வெளுக்கிறான்
6. இவன் வாணியன்_எண்ணெய் ஆட்டுகிறான்
7. இவன் சேனியன்_துணி நெய்கிறான்
8. இவன் பறையன்_தப்படிக்கிறான்
9. இவன் சக்கிலியன் _ செருப்புத் தைக்கிறான்
10. இவர் அய்யர்_வேதம் ஓதுகிறார்!
2010 முதல் தமிழகப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்கள் பின்வருமாறு:
1. உழவர் _ பயிர்களை வளர்ப்பவர்
2. ஆசிரியர் _ பாடம் கற்பிப்பவர்
3. மீனவர் _ கடலில் மீன்பிடிப்பவர்
4. வணிகர் _ பொருள்களை வாங்கி விற்பவர்.
5. மருத்துவர் _ நோயிலிருந்து காப்பவர்
6. தூய்மைப் பணியாளர் _ துப்புரவு செய்பவர்
7. சலவைக்காரர்_துணிகளைச் சலவை செய்பவர்
8. நெசவாளர் _ துணிகளை நெய்து தருபவர்
9. காவலர் _ சட்டம் ஒழுங்கைக் காப்பவர்
10. கட்டடக் கலைஞர் _ வீடு கட்டித் தருபவர்
ஆதாரம்: (வளரும் இளமை, 4ஆம் வகுப்பு 2ஆவது பாடம் _ பக்கம் 6)
இந்திய மக்கள் அறிவில்லாமல் இருப்பதற்குப் பார்ப்பனர்களே காரணம் என்று இந்தியத் தாய் புத்தகத்தில் மிஸ் மேயோ எழுதியதையும் நினைவில் கொள்ள வேண்டும். – பொன்.வெங்கடேசன், இராணிப்பேட்டை