பீட்டர் வேர்ஹிக்ஸ்

2014

பீட்டர் வேர்ஹிக்ஸ் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு சித்தாந்த இயற்பியலாளர். எடின்பரோ பல்கலைக்கழகத்தின் கவுரவப் பேராசிரியர்; 1960இல் மின்குறை சக்தி பற்றிய உடைந்த துகள்களின் ஒற்றுமையைப்பற்றிக் கூறிய யோசனையினால் அவர் புகழ் பெற்றார். அவ்விதமாக ஹிக்ஸ் மெக்கானிசம் என்று அழைக்கப்பட்ட கருத்து பல இயற்பியலாளர்களால் ஹிக்ஸ் அறிவித்த அதே நேரத்தில் ஒரு புதிய துகள் இருப்பதையே ஹிக்ஸ் போசோன் என்ற பெயரில் முன்கூட்டிச் சொல்லுகிறது.

2012 ஜூலை 4ஆம் தேதிய CERN அறிவிப்பின்படி பரிசோதனைக்காக, ஹிக்ஸ் போன்ற போசோன் இருப்பதை உறுதி செய்தாலும், மேற்கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும், அதில் உள்ள உட்பொருள்களைப் பகுத்தாய வேண்டும் எனவும், ஒருதரமான ஹிக்ஸ் போசானின் உட்பொருள்கள் என்னவாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. சரியாக உள்ளதா என ஆராயவும் 2013 மார்ச் 14ஆம் தேதி, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துகள் தற்காலிகமாக +Parity மற்றும் சுழியச் சுழற்சியாக உறுதி செய்யப்பட்டது.

ஹிக்ஸ் போசோனின் அடிப்படைக் காரணங்களாக, இயற்கையில் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட ஹிக்ஸ் முறையானது பொதுவாக துகள் இயற்பியலின் தரமான மாதிரியின் முக்கியமான கருப்பொருளாக ஒத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. அது இல்லாமல், சில துகள்கள் உட்பொருள் இன்றி இருக்கும். தரமான துகளின் மாதிரிகள், அடிப்படைத் துகளின் நடத்தையை விளக்கும் அடிப்படை இயற்பியலின் கட்டமைப்புக்கு உட்பட்டதே. அதன் கனமானது அதன் உட்செறிவைக் கீழ் இழுக்கும் திறனால் பெருக்கப்படுவதாகும். பீட்டர் ஹிக்சின் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன், உட்செறிவு அமைவதைப் பற்றிய வினாவிற்குப் பதில் இல்லாமல் இருந்தது. விளக்கமுடியாத எல்லாமே கடவுள் செயல் என்று சொல்லப்பட்டது. அடர்வுகள் அமைவதிலும் அப்படித்தான் சொல்லப்பட்டன. ஆனால், அது, ஹிக்ஸ்போசோன் துகள் கண்டுபிடிப்பிற்கு முன்புதான் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பெருவெடிப்பு நடந்த ஒரு வினாடியில் பில்லியன் பங்கு நேரத்தில் அடர் பொருள் அமைப்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும். அடர்த்தித் திறன் உண்டான முறை பற்றி அறிய ஹிக்சின் புத்தகம் நமக்கு உதவக் கூடும். பொருட்செறிவு வழிமுறை பற்றிய விவரங்களுக்கு உதவும். அது ஹிக்ஸ் வழிமுறை என்று அழைக்கப்பட்டது. அதன்படி, பெரு வெடிப்பின்போது கடல் அளவிலான சக்திகள் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்தப்பட்டன. அது பெரும்பாலும் ஒன்றுக்கொன்று பொருந்தக்கூடிய ஒரு கடல்; மற்ற ஒவ்வொரு பகுதியிலும் இருந்து பிரிக்க முடியாததாக சில காலத்திற்கு இருந்தது.

ஒரு 10 அல்லது 15 வினாடிகளுக்குப் பிறகு இந்த ஒத்த தன்மை மீறப்பட்டு, சக்தியின் வேறுபாடுகளால் மீறப்பட்டு உடைக்கப்படுகிறது. இது இயற்பியலில் புதிய விதிமுறைகளுக்கு வழிவகுக்கிறது. துகள் இயற்பியலின் இந்த நிகழ்வு, தானே ஏற்படும் ஒத்த நிலை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டனில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தில் தற்பொழுது உள்ள ஹிக்சும், பெல்ஜியத்தில் உள்ள ப்ருஸ்ஸெவல் பல்கலைக்கழகத்தில் உள்ள ப்ரான்கோய்ஸ் எங்லெர்ட்டும் தனித்தனியாக 1960களின் முற்பகுதியில் துகள்களைக் கட்டாயப்படுத்தி, ஒரு வழிமுறையின் மூலமான நிகழ்ச்சியின் காரணமாக சில பொருள்களின் மீது செறிவை உண்டாக்கி துகள்களை வலுவேற்றியிருக்கக் கூடும். இந்தக் கருத்து, சக்தியின் காணாத் தோற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு, ஹிக்சின், பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியுள்ள கருத்தாகக் கருதப்பட்டது. அது குவாண்டம் நிலையாகக் கருதப்பட்டு சராசரி ஆக்க சக்தியைக் கொண்டதாகக் கருதப்பட்டது. அதன் நிலையில் குறுக்கிட்டால் நீரில் சலனங்கள் ஏற்படுவதைப் போல அலைகள் எழும்பும். சிறு சலனங்கள், குறிப்பிட்ட எல்லைக்குள் நிகழும்போது, துகள் என்று அழைக்கப்படுகிறது. ஹிக்சின் எல்லைக்குள் நிகழும் அத்தகைய துகள்கள் ஹிக்ஸ்போசோன் என்று அழைக்கப்படுகிறது.

துகள் இயற்பியலின் தரமான மாதிரி அமைப்புகளுக்கு முன்னே, பொருள் அடர்த்தி சேர்த்துக் கொள்ளுதல் கடவுளின் செயல் என்று கருதப்பட்டது. அதனை அடையாளம் காண்பதற்கு முன் அத்தகைய சிறு துகள் ஒரு புரியாத புதிராக இருந்தது. பீட்டர் ஹிக்ஸ் கடைசியாக, பொருண்மை அமைப்பிற்குக் காரணமான துகள்கள் இருப்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்தினார். அந்தத் துகளை அவர் அடையாளம் கண்டு, அறிவியல் உலகத்தின் ஒரு வரலாற்று வெற்றியாக, கண்டுபிடித்து விட்டேன் கடவுள் துகளை என்று மகிழ்ச்சியுடன் கூவினார். கடவுள் துகள் என்று கதைக்கப்பட்டு வந்ததை, செறிவு உண்டாக்கும் உண்மையை நிலைநிறுத்தும் வகையில் நாத்திகர் என்று நன்கு அறியப்பட்ட ஹிக்சினால், விளக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை, அது கடவுளின் செயலாகத்தான் கருதப்பட்டது. கடவுளின் செயலாகக் கருதப்பட்ட பொருள் சேர்க்கை, ஒரு குறிப்பிட்ட துகளின் நிலைப்பாட்டால்தான் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவியல் ஆதாரங்களுடன் விளக்கப்பட்டு, அந்தத் துகளுக்கு ஹிக்ஸ் போசோன் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. கடவுளின் செயல் என்று கருதப்பட்டது, கடவுளின் செயல் இல்லையென்று நன்கு நிரூபிக்கப்பட்டு விட்டது.

இந்த சாதனைக்காக ஹிக்ஸ் பல விருதுகளால் கவுரவிக்கப்பட்டார். 1981இல் ராயல் சொசைட்டியினால் ஹியூக்ஸ் பதக்கமும் 1984இல் ரூதர்ஃபோர்டு பதக்கமும் நடைமுறை இயற்பியலில் தனித் திறமையான பங்களிப்பிற்காக இயற்பியல் கழகத்திலிருந்து டிராக் பதக்கமும் (ஞிவீக்ஷீணீநீ விமீபீணீறீ) அய்ரோப்பிய இயற்பியல் சொசைட்டியினால், உயிர் சக்தி மற்றும் துகள் இயற்பியல் பரிசும் 2004இல் இயற்பியலில் உல்ஃப் பரிசும், 2009இல் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் ஆஸ்கர் க்ளீன் நினைவுப் பேருரைப் பதக்கமும் அமெரிக்க இயற்பியல் சொசைட்டியின் நடைமுறைத் துகள் இயற்பியலிற்காக 2010இல் ஜே.ஜே.சக்குரை பரிசும், 2012இல் எடின்பரோ ராயல் சொசைட்டியின் இணையற்ற ஹிக்ஸ் பரிசும் கொடுக்கப்பட்டன. அண்மையிலான ஹிக்ஸ் போசோன் பற்றிய முக்கியக் கண்டுபிடிப்பானது சக இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், ஹிக்ஸ் தனது இந்த ஆய்விற்காக நோபல் பரிசு பெறவேண்டும் என்று எண்ண வைத்தது, அதன்படியே ஹிக்ஸ், ஃபிராங்கொய்ஸ் எங்லெர்ட் என்பவருடன் இணைந்து 2013இல் நோபல் பரிசு பெற்றார். 2013 புத்தாண்டு கவுரவிப்பாக கவுரவத் தோழர்களின் அமைப்பில் ஹிக்ஸ் பணியமர்த்தப்பட்டார்.

ஹிக்ஸ், 1929 மே 29ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள நியூகாசின் எல்ஸ்விக் மாவட்டத்தில் பிறந்தார். அவர் தந்தை ஆங்கிலேயர்; தாய் ஸ்காட்லாந்து பெண்மணி. அவரது தந்தை பி.பி.சி.யில் ஒலி அமைப்புப் பொறியாளராகப் பணிபுரிந்தார். இளம் வயதில் ஆஸ்துமா நோய் தாக்கம் காரணமாகவும், தந்தையின் வேலை காரணமாக அடிக்கடி இடம்விட்டு இடம் மாற வேண்டியிருந்ததாலும், இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தாலும் ஹிக்ஸ், ஆரம்பகாலப் பள்ளிப் படிப்பை இழந்தார். வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்றார். ஹிக்சின் தந்தை பெட்ஃபோர்டு நகருக்கு பணி காரணமாக இடம் பெயர்ந்தபோது ஹிக்ஸ் தன் தாயுடன் பிரிஸ்டல் நகரிலேயே தங்கிக் கொண்டார்.

அங்கேயேதான் அவர் வளர்ந்தார். 1941லிருந்து 1946 வரை பிரிஸ்டலில் உள்ள கோத்தம் இலக்கணப் பள்ளியில் பயின்றார். அப்பொழுது அப்பள்ளியின் முன்னாள் மாணவரான குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையின் கண்டுபிடிப்பாளரான பால் டிராக் (Paul Dirac)கினால் அவர் உந்துதல் பெற்றார்.

1946இல், ஹிக்ஸ் தனது 17ஆவது வயதில்  லண்டன் பள்ளிக்கூட நகருக்குப் பெயர்ந்தார். அங்கு அவர் கணிதத்தில் சிறப்பு நிலை பெற்றார். 1947இல் லண்டன் மன்னர் கல்லூரியில் சேர்ந்து 1950இல் இயற்பியலில் முதல் வகுப்பில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1952இல் முதுகலைப் பட்டம் பெற்று சார்லஸ் கோல்சன் மற்றும் கிருஸ்டோபர் லாங்குயிட் ஹிக்கின்ஸ் ஆகியவர்களின் மேற்பார்வையின்கீழ் அணுவின் உள்துகள் இயற்பியலில் முனைவர் பட்டம் பெறுவதற்காக பயின்றார். 1954இல் அணு உட்துகள் அதிர்வுகள் பற்றிய கருத்தில் சில பிரச்சினைகள் என்ற ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்றார்.

2012 ஜூலை 12ஆம் தேதி, ஒரு புதுத் துகள் இருப்பதற்கான அடையாளங்களை அட்லஸ் மற்றும் சி.எம்.எஸ் சோதனைகள் மூலமாக கண்டுள்ளதாக செர்ன் அறிவித்தது. அது ஹிக்ஸ் போசோன் ஆக இருக்கக்கூடும். ஜெனிவாவில் நடந்த ஒரு பயிலரங்கில் பேசும்போது அது உண்மையிலேயே, என் வாழ்நாளில் நடந்த நம்பமுடியாத செயல் என்று ஹிக்ஸ் குறிப்பிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், இது ஹிக்சின் போசனாக இருக்கலாம் என்ற உறுதிப்பாடு ஏற்படும் முன்பு ஹிக்சின் கட்டுரையை 2012 ஜூலை 6ஆம் தேதி நிராகரித்த இயற்பியல் கடிதங்கள் என்ற பத்திரிகையின் ஆசிரியர் இருந்த இடத்திலேயே இந்த நிகழ்ச்சி நடந்ததுதான்.

எடின்பரோ பல்கலைக்கழகம், வருங்கால இயற்பியல் நடைமுறை ஆராய்ச்சியை மேற்கொள்ள இருக்கும் ஓரிடத்திற்கு பேராசிரியர் ஹிக்ஸ் பெயரை வைத்துள்ளது.
2013 அக்டோபர் 8ஆம் தேதி பீட்டர் ஹிக்சும் ஃபிராங்கோய்ஸ் எங்லெர்ட்டும் 2013ஆம் ஆண்டின் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. துணை அணுத்துகள்களின் செறிவுப் பொருள்களின் தோற்றத்தைப் புரிந்து கொள்வதற்கும் அதற்குத் துணை நிற்கும் நடைமுறை வழிமுறைக் கண்டுபிடிப்பிற்கும் முன்கூட்டிச் சொல்லப்பட்ட அடிப்படைத் துகள்களுக்கும் செர்னின் அட்லஸ் மற்றும் சிஎம்எஸ் ஆய்வுகளுக்கும் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளதை ஹிக்ஸ் உடனடியாக அறியவில்லை; வீதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண்மணி அவரைப் பாராட்டியபோதுதான் அவருக்குத் தெரியவந்தது. தொடர்பு கொள்வதற்காக கைபேசியோ வேறுவிதமான சாதனமோ அவர் கொண்டிருக்கவில்லை.

இலண்டனில் இருந்தபோதும் எடின்பரோவில் இருந்தபோதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற பிரச்சார முயற்சியில் ஹிக்ஸ் ஒரு செயல் திறனாளியாக இருந்தார். ஆனால் அதற்கான இயக்கம் அணு ஆயுதத் தடைக்குப் பதிலாக அணுசக்திக்கே எதிராகத் திரும்பியபோது அவர் தனது உறுப்பினர் பதவியை உதறித் தள்ளினார்.

அவர் பசுமை இயக்கத்தின் உறுப்பினர்கூட. ஆனால் அந்த இயக்கம் மரபணு மாற்றத்தை எதிர்த்தபோது, அவர் வெளியேறினார். 2004ஆம் ஆண்டில் ஹிக்சுக்கு இயற்பியலுக்கான உல்ப்ஃ பரிசு ப்ரெனட் மற்றும் எங்லெர்ட்டுடன் இணைந்து வழங்கப்பட்டது. ஆனால் அதைப் பெறுவதற்கு ஜெருசலேம் நகருக்குப் பறந்துபோக அவர் மறுத்துவிட்டார். காரணம், அரசாங்கத்தால் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில், அன்றைய இஸ்ரேலின் தலைவர் மோஷி கட்சாவ் பங்கு பெற்றதுதான். பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு அவர் எதிர் எண்ணம் கொண்டிருந்தார்.

ஹிக்ஸ் ஒரு நாத்திகர். நாத்திகர் அல்லாதோர் கொண்டிருந்த அடிப்படை எதிர் வாதங்களைக் கொண்டிருந்ததற்காக அவர் ரிச்சர்ட் டாக்கின்சைப் பற்றிக் குறை கூறினார். ஹிக்சின் துகளை கடவுளின் துகள் என்று  பட்டப் பெயர் சூட்டி அழைப்பதை அவர் விரும்பவில்லை. மத உணர்வு படைத்தவர்களின் உணர்வுகளை அது புண்படுத்தும் என்று நம்பினார். ஹிக்ஸ் போசானுக்கு கடவுள் துகள் என்று பட்டப் பெயர் கொடுத்தவர் லியோன் லெடர் மேன் என்ற நூலாசிரியர். அவர், கடவுள் துகள்; உலகம் விடையானால், கேள்வி என்ன? என்ற நூலை எழுதியவர். ஆனால், லெடர் மேனின் புத்தக வெளியீட்டாளரின் வற்புறுத்தலின் பேரில்தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டதாம். ஆரம்பத்தில் லெடர்மேன் எரிச்சல் தரும் துகள் (நிஷீபீ பீணீனீஸீ ஜீணீக்ஷீவீநீறீமீ) என்ற பொருள்படும்படியான கொச்சை மொழியில்தான் பெயர் வைக்க விரும்பினாராம்.

ஹிக்சுக்கு இரண்டு மகன்கள். கிரிஸ் கணினிப் பொறியாளராகவும், ஜானி ஜாஸ் இசை வல்லுநராகவும் இருக்கிறார்கள். இரண்டு பேரப் பிள்ளைகளையும் பெற்றுள்ள ஹிக்ஸ் எடின்பரோ நகரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

– தமிழில் : ஆர்.ராம்தாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *