மண்டேலா வாழ்க்கைக் குறிப்பு

டிசம்பர் 16-31- 2013

  • 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார்.
  • தெம்பு அரச குடும்பத்தைச் சார்ந்த பரம்பரையில் வந்த மண்டேலாவின் தந்தையின் பெயர் காட்லா ஹென்றி. தாயின் பெயர் நோஸ் கெனிபேனி.
  • இளம் வயதிலேயே குத்துச் சண்டை வீரராக அறியப்பட்ட மண்டேலா ஆடு மாடு மேய்த்துக்கொண்டே பள்ளியில் படித்தார்.
  • லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து பட்டப் படிப்பையும் சட்டப்படிப்பையும் முடித்தார்.
  • கருப்பர் இன மக்களுக்கு எதிரான வெள்ளையர்களின் நிறவெறியை எதிர்த்து 1939ஆம் ஆண்டு போராடத் தொடங்கினார்.
  • வெள்ளையர் இன அரசுக்கு எதிராகப் புரட்சி செய்ததாகக் கூறி 1956ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
  • சிறையிலிருந்து விடுதலையான பின் தீவிரமாகப் போராடினார்.
  • 1961ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் படைத் தலைவர் ஆனார்.
  • 1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி வெள்ளையர் அரசால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
  • தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் 1964ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ஆயுள் தண்டனைக் கைதியானார்.
  • 18 ஆண்டுகள் ராபன் தீவில் தனிமைச் சிறைவாசம் அனுபவித்தார். பின் 1982ஆம் ஆண்டு போல்ஸ்மூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
  • உலக வரலாற்றில் தொடர்ந்து 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் மண்டேலாதான்.
  • 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
  • 1990ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ஆம் தேதி சர்வதேச மண்டேலா தினமாக அய்.நா.சபை அறிவித்துள்ளது.
  • 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தார்.
  • 1994ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி கருப்பர் இனத்தின் முதல் அதிபரானார்.
  • 1999ஆம் ஆண்டில் முதுமை காரணமாக அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
  • 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொது வாழ்விலிருந்து ஓய்வு பெற்ற மண்டேலா 2013, டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.
  • ஈவிலின் மேசே, வின்னி, கிரேகா மேச்சல் என மூன்று மனைவிகள்.
  • பள்ளி ஆசிரியர் நெல்சன் என்ற பெயர் சூட்டினார். முழுப்பெயர் நெல்சன் ரோலிஹ்லாலா (Nelson Rolihlahla).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *