- நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லி, சிரிக்க வைக்கும் கணினி மென்பொருளினை இங்கிலாந்திலுள்ள அபேர்தீர் பல்கலைக்-கழகத்தினர் உருவாக்கியுள்ளனர்.
- கனடாவில் உள்ள மார்கம் நகரின் நகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜீவந்தா நாதன் என்ற தமிழ்ப் பெண், திருக்குறள் புத்தகத்தினைக் கையில் வைத்து உறுதிமொழி எடுத்துப் பொறுப்பேற்றுள்ளார்.
- அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை ஆடியோவுடன் வீடியோ எடுத்து, புகாராகப் பதிவு செய்ய மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உருவாக்கியுள்ள சிறப்பு இணையதள முகவரி : www.cvc.nic.in
- வைரத்தின் அடிப்படைப் பொருளான கார்பன் நிறைந்த புதிய கிரகத்தை, அமெரிக்கவாழ் இந்தியர் தலைமையிலான விஞ்ஞானிகள் கண்டுபிடித்து டபிள்யூஏஎஸ்பி – 12 பி எனப் பெயரிட்டுள்ளனர்.
- பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும்வகையில், அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ 5,000 டெபாசிட் செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
- இந்தியா, தெற்கு ஆசிய நாடுகளுக்கான மலேசியாவின் சிறப்புப் பிரதிநிதியாக டத்தோ சாமிவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
- நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்பதைத் தடுக்க முடியாது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
- அடுத்த 12 ஆண்டுகளுக்குள் சூரியசக்தி மூலம் 20,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
- நிலமோசடிப் புகார் தொடர்பாக கருநாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு, தான் எழுதிய கடிதங்களுக்குக் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் பரத்வாஜ் கூறியுள்ளார்.
- ரகசியங்களை அம்பலப்படுத்தும் எனது பணி தொடரும் என விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.
- இணையதளத்தைப் பயன்படுத்துவதில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது.
- மருத்துவப் படிப்புக்கு இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வை நடத்துவது என்ற மருத்துவக் கவுன்சிலின் முடிவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
- மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு பொதுநுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை முழுமூச்சாக எதிர்ப்போம் என்று முதல் அமைச்சர் கலைஞர் தெரிவித்துள்ளார்.
புதியகிரகம் பரத்வாஜ் டத்தோ சாமிவேலு |