கேள்வி : மகரஜோதிக்குச் சென்றவர்கள் 106 பேர் பலி, ஜப்பானில் நில நடுக்கம், சுனாமிக்கு 1,800 பேர் பலி, ஒரு நகரம் முற்றிலும் அழிந்துவிட்டது. 2.15 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 10 லட்சம்பேர் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதற்குப் பிறகும் பலர் கடவுள் ஒருவன் உண்டு என்று நம்புகிறார்களே? – சி.சுவாமிநாதன், ஊற்றங்கரை
பதில் : மூடத்தனத்தின் முற்றிய நிலைதான் பக்தி! அதனால்தான் இந்த நிலை.
கேள்வி : பிராமணர்கள் ஓட்டு பிராமணத்திக்கே என்று அம்மா தொகுதி மாறிவிட்டாரே. தமிழர்கள் ஓட்டு தமிழர்களுக்கே என்ற தன்மான உணர்ச்சி அந்தக் கட்சியினருக்கு ஏற்படுமா? – சே. சிக்கந்தர் ஹயாத், இளையான்குடி
பதில் : தன்மானம் நிச்சயம் வெற்றிபெறும். 1971 போல – பல தமிழ்த் துரோக கூலிகள் மலிந்தாலும்கூட!
கேள்வி : மக்களாட்சியில், மக்களுக்காகச் சட்டமா? அல்லது சட்டத்திற்காக மக்களா? – பெ. மாடசாமி, ஆறுமுகனேரி
பதில் : உண்மையான மக்களாட்சியால் சட்டங்கள் மக்களுக்காகத்தானே தவிர, வேறில்லை தலைக்குத்தான் குல்லாய், குல்லாய்க்காகத் தலை கிடையாதே!
கேள்வி : கலைஞர் , ஸ்டாலின் சொத்துக் கணக்குகளை வெளியிடும் பார்ப்பன ஏடுகள், ஜெயலலிதா, சங்கராச்சாரியார் சொத்துக் கணக்குகளை மட்டும் வெளியிடுவதில்லையே ஏன்?
– த. ராஜகுரு, சிவகங்கைபதில் : ஜெ. அம்மையார் 1ரூபாய் சம்பளம் பெற்றே, சிறுதாவூர், 1000 ஏக்கர் கொடநாடு எஸ்டேட் போன்றவைகளைப் பெற்றுள்ளதை விட வியப்பின் சாதனை வேறு உண்டோ! அவாள் என்றால் இவாளைக் காட்டிக் கொடுப்பாரோ?
கேள்வி : பிராமணர் சங்கம் அ.தி.மு.க.வை இத்தேர்தலில் ஆதரிக்கப் போவதாகத் தீர்மானம் போட்டுள்ளதே… – பாவலர் அறிவரசன், திருலோக்கி
பதில் : தீர்மானம் போடாமலேயே ஊடகங்கள், பத்திரிகைகள் அந்தப் பணியைத்தானே செய்து வருகின்றன!
கேள்வி : தி.மு.க. கூட்டணியில் காங்கிரசு கட்சியைச் சேர்த்துக் கொண்டதே பலஹீனமாகத் தெரிகிறதல்லவா? – கோ.அருணாச்சலம், திருவண்ணாமலை
பதில் : ஒரு கூட்டணி என்பது ஒரு டீம் (குழு). குழுவில் உள்ள அனைவருமே பலசாலிகளாக ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது சரியல்லவே!
கேள்வி : கடவுளுடன் கூட்டணி என்றவருக்கு கடைசியில் என்ன நிலை வரப்போகிறது? – தொ.மாரியப்பன், ஊத்துக்கோட்டை
பதில் : அவர் பேச்சு தேர்தல் வந்தால் போச்சு என்பது புதுமொழி!
கேள்வி : தேர்தலுக்கு முன்பே கூட்டணிக் கட்சியை மதிக்காத ஜெ. தேர்தலுக்குப்பின் பந்தாடுவார் என்று உணர்வதில்லையே ஏன்?
-வ.ஆறுமுகம், திருப்பரங்குன்றம்பதில் : கெட்டபின்புதான் சிலருக்கு ஞானம் வரும்; இன்னும் சிலருக்கு பட்டபின்புதான் வரும். வேறு சிலருக்கு எப்போதுமே வராது. தமிழக அரசியலில் நீங்களே பகுத்துக் கொள்ளுங்கள்!
கேள்வி : உணவுக்காக இனி உலக மகாயுத்தம் என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அப்படி ஒரு நிலை வருமா? – கு.பவானி, திருநெல்வேலி
பதில் : உணவுக்காக மகா யுத்தம் வருமுன் நீருக்காக உலகநாடுகளிடையே போர்கள் வரும் என்பது உலக வல்லுநர்கள், பொறியாளர்கள் கருத்து!
கேள்வி : 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இறுதியாக 2773 பேர் போட்டியிடுகிறார்கள். இவ்வளவு பேர் போட்டியிடுவது தமிழக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தாலோ…?
– ஆ.ஆதவன், சைதாப்பேட்டைபதில் : நன்றாகக் கண்டுபிடித்தீர்கள்; தொண்டின்மீது ஆர்வம் பீறிட்டுக் கொண்டு வந்து கூத்தாடுகிறது போலும்!