ராமன் தற்கொலை
– சு.அறிவுக்கரசு
மாமிசம் தின்றனர்
காட்டுக்குள் நுழைந்த புதிதில், யமுனை ஆற்றங்கரையில் மேய்ந்து கொண்டிருந்த மான்களை வேட்டையாடிக் கொன்று அதன் கறியை ராமன், லட்சுமணன், சீதை தின்றிருக்கிறார்கள். இறைச்சி உணவை மறுத்தவர்கள், மரக்கறி மட்டுமே சாப்பிட்டவர்கள் என்பதை மறுக்கவே இதனை எடுத்துக்காட்டுவதாகவும் சாஸ்திரி குறிப்பிட்டிருக்கிறார்.
என்னைச் சந்தேகப்படாதீர். என் உடம்பை ராவணன் தொட்டதைப்பற்றிக் கேட்கிறீரா? அதை நான் விரும்பிக் கேட்கவில்லை. என் இதயம் உம்மையே நினைத்துக் கொண்டிருந்தது. என் கை, கால்கள் என்ன செய்யும்? என்னைவிடப் பலம் பொருந்தியவன் நெருங்கும்போது பலவீனமான என் உடல் உறுப்புகள் எப்படி எதிர்க்க முடியும்? என்னுடன் பழகி, ஒன்றாக வளர்ந்த நீரே எப்படி என்னைச் சந்தேகிக்கலாம்? என்னைப் புறக்கணிப்பதாக எப்படிக் கூறலாம்? அனுமனை என்னிடம் அனுப்பியபோதே இந்தச் செய்தியைக் கூறி அனுப்பியிருந்தால் அனுமன் கண் முன்னாலேயே நான் இறந்துபோய், இத்தனைத் துன்பங்களை இப்போது உனக்குத் தரும் நிலை வந்திருக்காதே! என்றும், இன்னும் என்னென்னவோ கொட்டித் தீர்த்துத் தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறாள் என்பதை சாஸ்திரி எடுத்துக் காட்டுகிறார்.
சீதையின் கற்பு
ஆக, சீதை ராவணனிடம் தன் மனதைப் பறிகொடுக்கவில்லை. உடலைத் தந்திருக்கிறாள். விரும்பிப் போகவில்லை. வலுவினால் ராவணன் சீதையை அடைந்திருக்கிறான். விருப்பமில்லாத பெண்ணைத் தொட்டால் ராவணனின் தலை வெடித்து விடும் என்கிற சாபம் பலித்து ராவணன் சாகவில்லையே! அப்படி என்றால் சீதை விருப்பம் இல்லாத பெண் அல்ல என்றுதானே அர்த்தம்?
கம்பராமாயணத்தில்கூட, மனதால் வாக்கால் மறுவுற்றேன் எனில், என்று சாமர்த்தியமாகக் கூறித்தானே சீதை அக்னிப் பரிட்சையில் இறங்கினாள் என்பதாக வருகிறது! மனம், வாக்கு, காயம் என்பதாக மூன்று. காயம் என்றால் உடம்பு. சீதை காயத்தைப் பற்றிப் பேசவில்லையே! காயம் ராவணனால் காயப்பட்டுவிட்ட காரணத்தால் கம்பன்கூட விட்டுவிட்டானோ? இருக்கலாம்.
ராமனின் இரட்டைப் பிள்ளைகளான லவனும் குசனும் தந்தையிடம் சேர்ந்த பிறகும்கூட, காவி உடை அணிந்து சன்னியாசினிக் கோலத்தில் இருந்த சீதையைத் தன் புனிதத்தை மெய்ப்பிக்க மீண்டும் சபதம் எடுக்க வேண்டும் என்று ராமன் கேட்கிறான். வேண்டாமய்யா, நான் வந்த இடத்திற்கே போகிறேன் எனும் பாணியில் சீதை பூமாதேவியை வணங்கி வேண்டுகிறாள். பூமி பிளக்கிறது. தங்கச் சிம்மாசனம் தெரிகிறது. அதில் அமர்ந்திருந்த பூமாதேவி, தன் மகளான சீதையை அழைத்துக் கொள்கிறாள். சீதை மறைகிறாள்.
பின்னர் ராமன் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டு சாகிறான். கடவுள் கதை தற்கொலையில் முடிகிறது. கேவலம்தான்.
அதனால்தான் மாசு வந்து எய்யவும் வையம் தன்னை இகழவும் காரணமான ராமாயண மொழிபெயர்ப்பைத் தமிழில் செய்த கம்பன், இவ்வளவு முக்கிய நிகழ்ச்சிகள் நடந்த உத்தர காண்டத்தை மொழிபெயர்க்காமல் விட்டுவிட்டான். முழுக்கதையையும் தெரிவிக்காமல் துரோகம் செய்தான். கம்பன் விழா நடத்துவோர், என்ன சமாதானம் கூறுவார்கள்?
ராம கதை வரலாறா?
கல்கி கிருஷ்ணமூர்த்தி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்கள் சில வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில் நடந்தவை போன்ற கற்பனைக் கதைகளை எழுதினர். அந்தக் கதைகளில் வரும் சம்பவங்கள் நிஜமாகவே நடந்தனவா? அல்லவே! கதாபாத்திரங்களில்கூட இரண்டொன்றைத் தவிர, மற்றவை கற்பனைப் பாத்திரங்களே! அவற்றை வரலாறு என்று நம்புவது மடமை.
அதேபோல, வடநாட்டில் நடந்த அரசாட்சிக் காலத்தில் நடந்ததாகக் கற்பனைக் கதையை முதலில் வால்மீகி எழுதினான். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு துளசிதாஸ் என்பவன் இந்தியில் எழுதினான். தமிழில் கம்பன், மலையாளத்தில் எழுத்தச்சன் என்று பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு ராமாயணங்கள் வந்தன. திபேத், தாய்லாந்து, இந்தோனேஷியா, ஜப்பான் போல பல வெளிநாடுகளிலும் ராமாயணக் கதைகள் உள்ளன. சுமார் 50க்கு மேற்பட்ட ராமாயணக் கதைகள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்றுபோல் இல்லை. மாறுதல்கள் நிறைய உள்ளன. ராவணனும் சீதையும் அண்ணன் தங்கை என்றுகூட உறவு முறையில் வேறுபாடு உள்ள ராமாயணம் உள்ளது. தமிழ்நாட்டில் பார்ப்பன நாடக நடிகரான ஆர்.எஸ்.மனோகர் என்பவர் இந்த உறவுமுறையில் உள்ள கதையை இலங்கேசுவரன் எனும் தலைப்பில் நாடகமாக நடத்தினார். அதனைப் பார்த்து ராஜாஜியும் பாராட்டினார். தந்தை பெரியாரும் பாராட்டியுள்ளார்.
கம்பனின் துரோகம்
எனவே, ஒரு கற்பனைக் கதை ராமாயணம். அதனைத் தமிழில் மொழிபெயர்க்கும் காரியத்தைச் செய்த கம்பன் என்பான், ராமனைக் கடவுளாக, கடவுள் அவதாரமாக ஆக்கி மொழிபெயர்த்து விட்டான். அதற்கேற்ப பல சம்பவங்களைக் கதையில் புகுத்தினான். ராமன் கடவுளாக ஆக்கப்பட்டான் கயவர்களால்!
ஆதிக்கம், ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றின் மீது நாட்டம் செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு ஆதர்ஷ புருஷனாக ராமன் காட்சியளிக்கிறான். நீதி, நேர்மைக்கு உதாரண புருஷனாக பாரதக் கதையின் தருமனைப் போல! வலுவாளிகளுக்கு பீமனைப் போல! படிப்பறிவில்லாத மக்களின் அறியாமை, பக்தி முதலியவற்றைப் பயன்படுத்தி, ராமனைக் கடவுளாக்கி ஆட்சியைப் பிடிக்கப் பயன்படுத்துகிறார்கள் மதவெறிக் கட்சியினர். இதிகாசம் என்றால் நடந்த கதை, வரலாறு என்று கூறிக் கொண்டு ஏமாற்றுகிறார்கள். மேலைநாட்டு இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களைக் கிரேக்க, ரோமானியர்களோ மற்றவர்களோ கடவுளாக்கியதும் இல்லை, கடவுளாகக் கருதுவதும் இல்லை, மக்களை ஏமாற்றிப் பதவிக்கு வரத் துடிப்பதும் இல்லை.
இத்தகைய ஏமாற்று வேலைகள் எல்லாமே புண்ணிய பாரத பூமியில் மட்டுமே நடக்கின்றவை. அதை மட்டும் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும்.
– (முற்றும்)
var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();